இந்தியா

ஜோக் அருவி

கம்பீரமும் பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி இது. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தியாகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளைக் கொண்டது. ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும் குன்றுகளிலும் வழிந்து ஓடி, 830 அடி உயரத்திலிருந்து வீழும் அற்புதக் காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவர். அதோடு அருவியைச் சுற்றி பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும் செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மெருகேற்றுகிறது.

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பதற்கென்றே பார்வையாளர் இடங்களை அமைத்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றியிருக்கும் ஸ்வர்ண நதியும் ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். கர்நாடகாவின் பசுமை வாய்ந்த பள்ளத்தாக்குகளின் மீது அமைத்துள்ள இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவது, இயற்கையுடன் இயைந்த ஓர் அற்புதமான அனுபவத்தைத் தரக்கூடியதாக அமையும். கர்நாடகாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலம் என்பதால் இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்ல அனைத்து போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Comment here