விளையாட்டு

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு

திண்டுக்கல்,

நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களையும் அடையாளம் கண்டு வாய்ப்பு அளித்து அவர்களது தரத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்டது தான், தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். போட்டி 2016-ம் ஆண்டு உதயமானது. முதலாவது சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், 2017-ம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கடந்த ஆண்டில் மதுரை பாந்தர்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், டி.நடராஜன், ஜெகதீசன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் அசத்தியதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எல். மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

Comment here