டிரம்புக்கு எதிராக இங்கிலாந்து மக்கள் போர்க்கொடி!

Rate this post

ங்கிலாந்து வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இங்கிலாந்து மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். லட்சணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கடும் கட்டுப்பாடு, வெளிநாட்டுப் பொருட்களுக்கு கூடுதல் வரி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க அகதிகள் குறித்த டிரம்பின் பேச்சு, இஸ்லாமிய நாடு களுக்கு தடை போன்ற போன்ற காரணங்களால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது இங்கிலாந்து மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் குறித்து இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை டிரம்ப் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசு முறைப் பயணமாக டிரம்ப் இங்கிலாந்து வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பேபிசிட்டர்ஸ் (Drump Babysitters) என்ற அமைப்பு டிரம்புக்கு எதிராக திரளும்படி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு டிம்புக்கு எதிராக கோஷமிட்டனர்.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. லண்டன் ரஃபால்கர் சதுக்கத்தில் ((Trafalgar Square)) குவிந்த 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டு, டிரம்பை திரும்பிப் போக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*