Sex Cams / தமிழகம் / டெங்கு காய்ச்சலால் இதுவரை உயிரிழப்பு இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

டெங்கு காய்ச்சலால் இதுவரை உயிரிழப்பு இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

tamilmalar on October 12, 2017 - 9:40 am in தமிழகம்
5 (100%) 1 vote
மதுரை சோலையழகுபுரம் பகுதியில் இன்று நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ‘டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ரத்த வங்கிகளிலும் தேவையான அளவு ரத்தம் உள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை யாரும் இறக்கவில்லை. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெங்கு விசயத்தில் அரசியல் செய்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சியைக் குறை சொல்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமான டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

முன்னதாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலவேம்பு கசாயத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கினர். சோலையழகுபுரம் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்களிடம் நாள்தோறும் இப்பகுதிகளுக்கு வந்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

0 POST COMMENT
Rate this article
5 (100%) 1 vote

Send Us A Message Here

Your email address will not be published. Required fields are marked *