அரசியல்

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது அமித்ஷாவிற்கு சால்வை அணிவித்தார்.

அதனை தொடர்ந்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஜெகன்மோகன் ரெட்டி,

இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானது. நாளை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளை பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

Comment here