கோர்ட்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி மேத்தா மாரடைப்பால் உயிரிழந்தார்

Rate this post
புதுடெல்லி: கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி மேத்தா, இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
‘நீதிபதி வால்மீகி மேத்தாவின் இறப்பு பேரிடியாக உள்ளது. இவரின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு மட்டுமின்றி, பார் கவுன்சில் மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற அமர்விற்கும் பேரிழப்பு’ என்று டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.சி.மிட்டல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வால்மீகி மேத்தா, ஜூன் 6-ம் தேதி 1959-ம் ஆண்டு பிறந்தார். கடந்த 2009-ம் ஆண்டு  ஏப்ரல் 15-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார்.
டெல்லி பல்கலைகழகத்தில் எல்.எல்.பி. பட்டபடிப்பை முடித்து விட்டு டெல்லி பார்கவுன்சிலில் சேர்ந்தார். அதன்பிறகு செப்டம்பர் 22, 2001 அன்று மூத்த  வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2009, ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். இவரது மகன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மகளை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment here