கதை

டைம் கேட்டது க்கு இப்புடி ஒரு அக்கப்போரா….

இளைஞன்: சார், டைம் என்னாச்சு?

வயதானவர்: சொல்ல முடியாது.

இளைஞன்: ஏன் சார்? டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது?

வயதானவர்: ஆமா, உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்!

இளைஞன்: அது எப்படி நஷ்டமாகும் சொல்லுங்க?

வயதானவர் : இதப்பாரு, நான் உனக்கு டைம் சொன்னா நீ எனக்கு நன்றி சொல்லுவ. ஒருவேளை நாளைக்கும் நீ என் கிட்ட டைம் கேட்கலாம்!

இளைஞன்: வாய்ப்பிருக்கு!.

வயதானவர்: இரண்டு மூணு தடவையோ அதுக்கு மேலேயோ நாம சந்திக்கலாம். நீங்க என் பேரு அட்ரஸ் கேட்கலாம்!

இளைஞன்: ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு.

வயதானவர்: ஒரு நாள் நீ என் வீட்டு வரலாம். சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம். நான் உன்னை உபசரிக்க காபி தரலாம். என்னோட உபசரிப்ப பார்த்துட்டு நீ மறுபடியும் வர முயற்சி பண்ணலாம். இந்த தடவை நான் காபியை பாராட்டி யார் இதை போட்டதுனு நீ கேட்பே!

இளைஞன்: ஆமா செய்யலாம்!

வயதானவர்: அப்புறம் நான் அது என் பொண்ணு போட்டதுன்னு சொல்வேன். நான் என் அழகான பொண்ணை உனக்கு அறிமுகப்படுத்துவேன். நீ உடனே ஜொள்ளு விடுவே.

இளைஞன்: (புன்னகைக்கிறார்)

வயதானவர்: அப்ப இருந்து நீ என் பொண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. நீ அவளை படத்துக்கு கூட்டிட்டு போவேன் வெளியே வேற எங்கயாவது கூட்டிட்டு போவே.

இளைஞன்: (புன்னகைக்கிறார்)

வயதானவர்: என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். உனக்காக காத்திருக்க தொடங்கலாம். தொடர்ந்து சந்திச்ச பிறகு நீ அவளை லவ் பண்ணி காதலை அவகிட்ட சொல்லுவே. இரண்டு பேரும் லவ் பண்ணுவீங்க.

இளைஞன்: (மீண்டும் புன்னகைக்கிறார்)

வயதானவர்: ஒரு நாள் நீயும் அவளும் என் கிட்ட வந்து உங்க காதலை பத்தி சொல்லி கல்யாணம் பண்ண சம்மதம் கேப்பீங்க!

இளைஞன்: ஆமா சார்! ஆனா இதுக்கும் டைம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம்?

வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..

Comment here