பொது

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 144 அதிகம்

Rate this post

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித் துள்ளது.

இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத் தைத் தொட்டது.

முதல்முறையாக, 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. இந்த விலை ஏற்றம் இன்றும் தொடர்ந்தது.

சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்து ரூ 3,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Comment here