தமிழகம்

தஞ்சை கோவிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் ஏலம் – வெளியான அதிர்ச்சி தகவல்…!

Rate this post

தஞ்சை கோவிலில் திருட்டு போன சிலை அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள பழமையான கலச சம்ஹார மூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி வெண்கல சிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டுள்ளது.

இதனால், இச்சிலைக்கு பதிலாக போலியான வேறொரு சிலை கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை கோவிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் ஏலம்

திருடப்பட்ட சிலை குறித்து புகார் கொடுக்கப்பட்டத்தையடுத்து, கடந்த 2020 ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, திருடப்பட்ட கலச சம்ஹாரமூர்த்தியின் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் டாட் காம் இணையதளத்தில் சிலையின் படம் வெளியாகியுள்ளது. இச்சிலை ஏலம் விடப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

இச்சிலையின் மதிப்பு 43 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றும், மேற்படி இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சிலைக்கான உரிய ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சிலையை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comment here