Sliderமருத்துவம்

தண்ணீர் குடிங்க- அதிலும் செம்பு பாத்திரத்தில் குடிங்க! -ஏன் தெரியுமா?

Rate this post

நாம் வாழும் இந்த பூமிப் பந்து முழுவதும் சுமார் 75% தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 2.5% மட்டுமே மனிதர்களால் மனிதர்கள் குடிக்க பயன்படுத்தும் சுத்தமான தண்ணீராக உள்ளது. நமது உடலில் 60%-ற்கும் மேலாக தண்ணீரால் மட்டுமே நிரம்பியுள்ளது. இதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து எப்பொழுதும் கிடைக்கிறது. நமது உடலில் உள்ள எல்லா அமைப்புகளும் தண்ணீரின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளன. அதாவது தண்ணீர் இயற்கையான உராய்வைத் தடுக்கும் பொருளாக செயல்பட்டு நமது உடல் பாகங்களை மென்மையாக செயல்பட வைக்கிறது. நமது உடலில் உள்ள நச்சப் பொருட்கள் மற்றும் சிறுநீர், வியர்வை வழியாக உடலில் உற்பத்தியாகும் பிற தேவையற்றவற்றை வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது. நமது செல்களுக்கு சத்துக்களை எடுத்துச் செல்லவும் மற்றும் காது, மூக்கு, தொண்டை பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்கவும் தண்ணீர்; உதவுகிறது. தண்ணீரின் அளவு குறைந்தால், உங்களுடைய உடல் தளர்ந்து விடும். குறைந்த அளவில் இந்த பிரச்சனை வந்தால் கூட அது உங்கள் சக்தியை உறிஞ்சி தளரச் செய்துவிடும்.

‘நான் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?’ என்று கேட்பது பலரிடமும் உள்ள கேள்வி. அது ஒவ்வொரு மனிதரும் வசிக்கும் பருவநிலை, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை போன்ற காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் வசித்து வந்தால், இலண்டனில் வசிப்பவரை விட அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். வெப்பமான பருவநிலையில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் நிறைய தண்ணீர் குடித்து உடலை புதுப்பிக்க வேண்டியிருக்கும். அதே போல, விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களும் மற்றும் கடினமான உடலுழைப்புகளில் ஈடுபடுபவர்களும் அவர்களுடைய உடலின் நீர்ம அளவை பராமரிக்கும் பொருட்டாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதனிடையே  பழங்காலத்தில் செம்பு பாத்திரங்களும், பொருட்களும் அதிகம் பயன்படுத்தப்பட்டன. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கும் அதிக கேடு விளைவிக்கிறது. ஆம்.. ம்மில் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள், சித்த மருத்துவர்கள்..

அதன்படி செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

‘செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று’ என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி…விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆக ‘செம்பு பல்வேறு மருத்துவரீதியான பலன்களைக் கொண்டது. வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த முடியாதவர்கள் செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். Oligodynamic effect என்ற விளைவானது தண்ணீருக்குள் நேரடியாக செல்வதால் அது காப்பருடன் கலந்து இதுபோல் நீர் சுத்தப்படுகிறது. வலிப்புநோய் உள்ளவர்களுக்கு செம்பு பாத்திரத்தின் தண்ணீர் மிகவும் பயன்படக்கூடியது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கும் செம்பு பாத்திரத்தின் நீரானது கொழுப்பைக் கரைக்கப் பயன்படுகிறது.

இது முதுமையைத் தள்ளிப்போடுகிறது. அத்தோடு புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆர்த்தரைட்டிஸ் நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கும், தைராய்டுக்கும் தொடர்ந்து செம்பில் நீர் அருந்தும்போது நல்ல நிவாரணம் கிடைக்கிறது. சாதாரணமாக செம்பு பாத்திரம் அல்லது குடத்தில் நீர் நிரப்பப்பட்டு 8 முதல் 10 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயன் நமக்கு கிடைக்கும் என்றார்கள்.

Comment here