டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை : உச்ச நீதிமன்றம்

Rate this post

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க அரசிடமிருந்து மலிவாகவும் மற்றும் சில இடங்களில் இலவசமாகவும் நிலங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசிடமிருந்து மலிவு விலை மற்றும் இலவசமாக நிலங்களைப் பெற்று கட்டப்படும் தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்; உள்நோயாளிகளுக்கு 10 சதவிகிதமும், வெளிநோயாளிகளுக்கு 25 சதவிகிதமும் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குப் பின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், டெல்லியில் அரசு மானியமாக வழங்கிய நிலத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த உத்தரவை தனியார் மருத்துவமனைகள் மீறினாலோ, ஏழைகளுக்குப் பாரபட்சமாக சிகிச்சை அளித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*