உலகம்தமிழகம்பொது

தனி நபர் தகவல்களை திருடி ஆன்லைன் மோசடி : ஹேக்கர் கைது

அமெரிக்காவில் தனி நபர்களின் முக்கிய தகவல்களை திருடி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த ஆன்ரேய் டியூரினை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் மான் ஹாட்டன் நகரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 10 கோடி வாடிக்கையளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. பின்னர், தனி நபர் முக்கிய தகவல்களை கொண்டு, அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து, அந்நாட்டு போலீசார் தனிப்படை அமைத்து ஹேக்கரை இரகசியமாக தேடி வந்தது, இதனையடுத்து, தகவல்களை திருடியது ரஷியாவை சேர்ந்த ஆன்ரேய் டியூரின்(35) எனற ஹேக்கர் என தெரியவந்தது.

அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜார்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது. அமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக தொழில்நுட்பத்தில் முன்னோடியாக அமெரிக்கா உள்ளது என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் தனி நபர் பல முக்கிய தகவல்களை திருடியது பலரை வியப்பு அடைய செய்துள்ளது.

Comment here