தமிழகம்

தன் பிறந்தநாளன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்…!

Rate this post

உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பிறந்தநாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை வரவழைத்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட காவலர்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 2008ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து தற்பொழுது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் முடித்துவிட்டு காலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார்.

இரவு முழுவதும் மன அழுத்தத்தில் இருந்த இவர் தனது வீட்டு அறையில் புடவையால் தூக்கிட்டு கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலையிலிருந்து மன அழுத்தத்தில் இந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற காவலர்களுக்குயிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவலருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment here