தமிழகத்திற்கு அவமானம், மத்திய மாநில அரசுகள் செயல் படுகிறதா என பா.ம.க அன்புமணி

Rate this post

புயல் பாதித்து 68 பேர் பலியான நிலையில் ஹெலிகாப்டரில் முதல்வர் பார்வையிட்டது தமிழகத்திற்கு அவமானம், மத்திய மாநில அரசுகள் செயல் படுகிறதா என பா.ம.க அன்புமணி கேள்வி

சென்னை பல்லாவரத்தில் ஐ.டி துறையினரிடம் நேரிடையாக உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பா.ம.க இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உருப்பினருமான மருத்துவர் அன்புமணிராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

புயல் பாதித்த 8 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கைகள் இல்லை, பிரதமரோ உள்துறை அமைச்சரோ அல்லது மூத்த அமைச்சரோ பார்த்திருக்கவேண்டும் ஆனால் புயல் பாதித்ததில் 68 பேர் பலியான நிலையில் ஹெலிகாப்டரில் தமிழக முதல்வர் மேலோட்டமாக பார்வையிட்டது தமிழகத்திற்கு அவமானம்,

நான் முதல்வராக இருந்தால் புயல் பாதித்த இடத்தில் இருந்து பணியாற்றி இருப்பேன், கேரளாவில் பிரனாய் விஜயன் மழைபாதிப்பின்போது மக்களுடன் இருந்தார்,

பிரதமர் மோடி தலமையிலான தேசிய பேரிடர் ஆணையம், முதல்வர் தலமையிலான மாநில பேரிடர் ஆணையம் என்ன செய்தது, 8 மாவட்டங்கள் பாதித்த நிலையில் தமிழகம் கேட்ட 15,000கோடியில் முதல்கட்டமாக 50 சதவீதம் மத்திய அரசு வழங்கிடவேண்டும்,

பா.ம.க சார்பில் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்துவரும் நிலையில் 1லட்சம் தென்னைமரக்கன்றுகள் நட்டு பாராமரிப்பு செய்துதரப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பேட்டி:1.அன்புமணி ராமதாஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*