தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிய ஒப்பந்தம் : ரூ.6000 கோடி முதலீடு

Rate this post

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, ஓஏஎல்பி ஒப்பந்தத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல்வேறு நிறுவனங் கள், சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் உயரும். விவசாயிகள் தங்கள் எல்லைக்கோடுகளுக்குள் நின்று செயல்பட்டால், ஹைட்ரோகார்பன் எடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றார். தமிழகத்தில் ஹைட்ரோகார் பன் எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறித்து அமைச்சர் மிக சுருக்கமாக பதில் அளித்தார். அங்குள்ள மூன்று இடங்களும் கடல் பகுதியில் வருவதாகவும், அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். ஆனால், ஒப்பந்த நிகழ்ச்சியின் போது, ஹைட்ரோகார்பன் எடுப்பது குறித்து படவிளக்கக் காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அதில், ஓஎன்ஜிசிக்கு அளிக்கப்பட்டது நிலப் பகுதியில் வருவதாகவும், வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டும் கடல் பகுதியில் வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் அதன் தலைவர் அனில் அகர்வால் பேசுகையில், வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 இடங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படும் என நம்புகிறேன். தாமிர உற்பத்தியால் யாருக்கும் ஆபத்து ஏற்படாது. அது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*