பொது

தமிழகத்தில் 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவை-சத்யபிரதா சாஹூ

சென்னை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 14,10,745 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்  தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரூ.127.66 கோடியில், ரூ 62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக  கண்டறியப்பட்டுள்ளது. 1,50,302 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றில் விவிபேட் 94,653  என கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவின் பேட்டி, முதல்முறையாக சைகை முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Comment here