வானிலை

தமிழகம் – புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி, வேலூர், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக, கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக தோவாலாவில் 3 செ.மீ., பள்ளிப்பட்டு, பெரியகுளம், கமுதியில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என கூறினார்.

Comment here