தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரெய்ட் இறுதிக் கட்டம்!

Rate this post

187 இடங்களில் கடந்த 5 நாள்களாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வரவுள்ளதாக வருவான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

சசிகலா உறவினர்களின் வீடுகள், ஜெயா தொலைக்காட்சி , அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம், விவேக்கிற்கு தொடர்புடைய இடங்கள் என 187 இடங்களில் கடந்த ஐந்து நாள்களாக நடந்து வரும் சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா வரலாற்றில், வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் ஒரே நேரத்தில் அதிக இடங்களில் நடந்த சோதனை இதுவென விவரிக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு1800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை, மன்னார்குடி, சிதம்பரம், கொடநாடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், ஏராளமான பண பரிவர்த்தனைகள், போலி நிறுவனங்கள், சொத்துக்கள், விலையுயர்ந்த பொருள்கள் என பல கணக்கில் வராத ஆவணங்கள் சிகிகயுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், “வரி ஏய்ப்பு செய்ததாக வலுவான ஆதாரங்கள் கிடைத்த பிறகே இந்த சோதனையினை மேற்கொண்டோம். சசிகாலாவுக்கு தொடர்புடைய அனைவருமே இந்த சோதனையின் கீழ் கொண்டுவரப்பட்டனர். சோதனை முடியும் தருவாயில் உள்ளது. தற்போது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சரிபார்த்து வருகிறோம். அவர்கள் தரப்பில் இருந்து வாக்குமூலத்தையும் வாங்கி வருகிறோம். இந்த சோதனை முடிந்த பிறகு வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்

சசிகலா குடும்பத்தை பொருத்த வரையில் 8 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*