தமிழக சட்டசபை 29-ம் தேதி கூடுகிறது – மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்

Rate this post

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்ததும், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர், 22ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடுவதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*