தமிழரிஞர் விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி : தமிழ் வளர்ச்சித் துறை

Rate this post

தமிழரிஞர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு சார்பில், திருக்குறள் நெறி பரப்புவோருக்கு, திருவள்ளுவர் விருது; பாரதியார் புகழ் பரப்பு வோருக்கு, மகாகவி பாரதியார் விருது; சிறந்த கவிஞருக்கு, பாரதிதாசன் விருது வழங்கப்பட உள்ளது.சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு, திரு.வி.க., விருது; சிறந்த தமிழ் அறிஞருக்கு, கி.ஆ.பெ.,விசுவநாதம் விருது; காமராஜர் வழியில் தொண்டாற்றுபவருக்கு, காமராஜர் விருது; தமிழ் சமுதாயம் முன்னேற பாடுபடுபவருக்கு, அண்ணாத்துரை விருது வழங்கப்பட உள்ளது.விண்ணப்ப படிவத்தை, தமிழ் வளர்ச்சித் துறையின், www.tamilvalarchithurai.com இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், சுயவிபர குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்களை பட்டியலிட்டு, அவற்றின் ஒரு பிரதியுடன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 – 2819 0412, 2819 0413 ஆகிய, தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம். விருதுகள், ஜனவரியில், திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*