அரசியல்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் பரமக்குடி கிளை ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் பரமக்குடி கிளை ஆலோசனை கூட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டம் இன்று மாலை 5.00 மணி அளவில் மாமு கார்டன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பரமக்குடி கிளை மூத்த பத்திரிக்கையாளர் திரு.மாமு.ஜெயக்குமார் அவர்கள் தலைமை பொறுப்பேற்றும், திரு.செள. திலிப் குமார் அவர்கள் முன்னிலை பொறுப்பேற்றும் நடத்தினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு.மூர்த்தி ( மூத்த பத்திரிக்கையாளர்) தேசியக் குழு உறுப்பினரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு. மாரிமுத்து அவர்கள் , மாவட்ட பொருளாளர் திரு.குகன் ( மூத்த பத்திரிக்கையாளர்) முன்னாள் மாவட்ட தலைவர் திரு.அன்வர் அலி ( மூத்த பத்திரிக்கையாளர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை, தொண்டி, R.S மங்களம் பகுதியில் இருந்து TUJ உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கி சிறப்புரை நிகழ்த்திய மாநில தலைவர் தோழர் DSR. சுபாஷ் அவர்கள், பரமக்குடி கிளை நிர்வாகிகளாக
கீழ்கண்ட நபர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

தலைவர்.திரு. மாமு.ஜெயக்குமார்
து.தலைவர். திரு.பா.தனசேகர்
செயலாளர்.திரு.செள. திலிப் குமார்
து.செயலாளர் .திரு .JS . இராஜன்
பொருளாளர் : திரு .சு.சுதாகர்

ஒருங்கிணைப்பாளர்
திரு.நா. அரசகுமாரன்

செய்தி தொடர்பாளர்
திரு.சை. குணாளன்

ஆகியோரை அறிவித்து உரை நிகழ்த்தினார்.

சங்க வளர்ச்சி குறித்த கருத்துக்களை மூத்த உறுப்பினர்கள் திரு.கோட்டை சாமி, திரு.ஜெகசிற்பியன் திரு.திலீப் குமார் போன்றோர் பதிவு செய்தனர்.

இந்த நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் தோழர் K.குகன் & S.குணாளன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்…

வரவேற்புரையை திரு.தனசேகர் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சியின் நல் முடிவின் நன்றியுரையை திரு.சுதாகர் வழங்கினார்

நிகழ்ச்சியை திரு.அரசகுமாரன்
தொகுத்து வழங்கினார்.

Comment here