Sliderதமிழகம்

தமிழ்முறை திருமணம்

 

நம் இந்திய திருநாட்டில் இந்துமதம், இஸ்லாம் மதம், புத்த மதம், சீக்கியமதம், பார்சிமதம்,கிருத்துவமதம், என பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வகையான திருமண முறைகள் உள்ளன. அதிலும் நம் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்கள் பலவகை உண்டு. இவற்றில் தமிழர்களின் திருமணங்கள் புதுமையானவயாகவும், சிறப்பானவையாகவும் இருக்கும். தமிழர்களின் திருமண முறைகள் கலாச்சாரம் பண்பாட்டை பறைசாற்றுவதாகவே இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஐதீக திருமணங்கள், ஆன்மீக திருமணங்கள், சீர்திருத்ததிருமணங்கள்,மிக முக்கியமானவை. அதுவும் ஆன்மீக திருமணங்களில் தமிழ் முறைப்படி நடைபெறும் திருமணங்கள் தற்போது பெருகிவருகின்றன.

செம்மொழி புலவர் மறைமலையடிகள் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தன்னை சந்திக்க வரும் அன்பர்களின் பெயரை முதலில் தமிழ் மாற்றிவிட்டுதான் அடுத்த காரியத்தை செய்வார். இவருடைய நண்பர் ஆடலரசு மூலம் தமிழ் வழி திருமணங்களையும்,தமிழ் வழி சடங்குகளையும் அதாவது குழந்தை பிறந்தவுடன் நடைபெறும் சடங்கு, மொட்டையடித்து காத்து குத்துதல், மஞ்சள் நீராட்டு, திருமணம் போன்ற நிகழ்சிகளை தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் பாடி எல்லாம்வல்ல ஈசனை தொழுது தேவர்கள்,மூவரையும் வேண்டி அழைத்து,  கிரகஸ்தர்களையும், நட்சத்திரங்களையும் வேண்டி 63 நாயன்மார்களின் அருளாசியோடு அப்பர்,சுந்தரர் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் உடனிருந்து வாழ்த்துவதாக கருதி அவர்கள் இயற்றிய தேவார பாடல்களை சிவனடியார்கள் மனமுருகிபாட முப்பத்துமுக்கோடி தேவர்களும் வாழ்த்துவதாக உணர்ந்து

நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனை அரையன்

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செய்யும்ஊர் அணி நாவலூர் என்று

ஓதநல் தக்க வன்தொண்டன் ஆரூரன்உரைத்த தமிழ்

காதலித்தும் கற்றும் கேட்பவர்தம் வினைக்கட்டு அறமே

-சுந்தரர் தேவாரம்

தமிழ் மரபுப்படி விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் (சமயகுரவர்கள் நால்வருள் ஒருவரான  சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த தலம்)

சுந்தரமூர்த்தி – பிச்சம்மாள் தம்பதியினரின் மகன் டாக்டர் தீபக்நாரயணன் என்பவருக்கும், தியாகராஜா பெருமான் உறையும் திருவாரூர் கீழக்காவதுகுடி சிவ இளங்கோநகர் முத்துக்குமாரசாமிபிள்ளை – சுசிலா தம்பதியினரின் மகள் அபிராமிக்கும் திருவாரூர் தெற்குவீதி AKM காசிநாதன் திருமணமண்டபத்தில் திரு நெறிய தீந்தமிழ் முறைப்படி “சைவதமிழ்மணி” சிவத்திரு நா.ஒளியரசு ஐயா தலைமையில்,பாவனை சிவனடியார் திருக்கூட்டஅறக்கட்டளை  தலைவர் “சிவதமிழ்செல்வர்” சிவ .அ.தியாகராஜன் தீந்தமிழ்திருமுறை வேள்வியை நடத்திடவும் சிவனடியார்களும் ஓதுவார்களும் தமிமுறை திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர். மணமக்களை சிவனடியார்களும்,பெரியோர்களும்,உறவினர்களும், நண்பர்களும் மலர்தூவி வாழ்த்தினர்.

சஞ்சீவி வெங்கடேசன்

கை பேசி+91 9843797700

 

Comment here