இயல்தமிழ்

தமிழ்மொழி உலகில் தொன்மையான மொழி

நமக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயங்கள் இது போன்ற கல்வெட்டுகளிலிருந்தும், செப்பு தகடுகளிலிருந்தும் அதில் செதுக்கப்பட்ட எழுத்துகளிலிருந்து தெரிய வருகிறது என்பதை உணர்த்தி, மொழியின் வரிவடிவம் ஒரு செய்தியைப் பல தலைமுறையையும் தாண்டி அறிய உதவுகிறது, இப்படிப்பட்ட பயனுள்ள வரிவடிவம் கொண்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. அதுவும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி தோன்றியது மற்றும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே சிறந்த பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது. உலகில் 6000 மொழிகள் பேசப்பட்டாலும் 3000 மொழிகளுக்கே வரிவடிவம் உள்ளது. அதிலும் தமிழ் மொழி, வடமொழி, கிரேக்கம், லத்தின், சீன மற்றும் ஹீப்ரு மிகப் பழமையானது என்றும் எடுத்துரைப்பார். அதற்கானஆதாரமாக சிற்பங்கள், கோயில் கல்வெட்டுகள், செப்பு நாணயங்கள், ஓலைச்சுவடிகளின் புகைப்படங்களைக் காட்டுவார்.

தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டுகள்

இணையத் தளத்தில் பின் வரும் விடியோக்களை காட்டுவார். இதில் ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன என்பதன் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது.

செப்பு நாணயங்கள், ஓலைச் சுவடி, செப்பு தகடுகள்

விரிவாக்குதல்:
பனை ஓலைகளைச் சேகரித்து மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை அவர்களின் பெயர், விலாசம் போன்ற செய்திகள் ஓலைச்சுவடியில் ஆணியால் எழுதி பதிவு செய்து, புத்தகத்தின் நடுவே வைக்குமாறு கூறுவார். அப்பொழுது மாணவர்கள் புள்ளி ஏன் வைக்க முடிவில்லை, சில எழுத்துக்கள் ஏன் எழுத முடியவில்லை, அதை எவ்வாறு எழுதலாம் போன்றவற்றை கண்டுபிடித்துக் கூறுவர். மேலும் தொன்மை, செம்மொழி போன்ற சொற்களுக்குப் பொருளைக் கண்டுபிடிக்கச் செய்து அவற்றைக் கொண்டு வாக்கியங்கள் அமைக்குமாறு கூறுவார்.

Comment here