Sliderபிரத்யகம்

தருமபுரம் ஆதீனத்தின் அருள் இல்லாத ஆட்சி

Rate this post

 

தருமை ஆதினம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதிஸ்வரர் சுவாமி ஆலயம் சென்று எப்படி தல விருட்சத்தை பராமரிக்க வேண்டும் என்று கற்று கொள்ளவும்

ஒரு சிவாலயத்திற்கு சிறப்புகள் மூர்த்தி/ தல விருட்சம் /தீர்த்தம் / ஆனால் வைத்தீஸ்வரன் கோவிலில் அந்த சிறப்புகளை குழி தோண்டி புதைத்து விட்டது தருமை ஆதினம்

மூர்த்தி – 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குடமுழுக்கு செய்யாமல் மூர்த்தி சாந்தித்யம் இல்லாமல் செய்வது

தீர்த்தம் – தன்வந்திரி தீர்த்தத்தில் அருகில் உள்ள தங்கும் விடுதி கழிவு நீர் கலக்கிறது மற்றும் அளவுக்கு அதிகமாக தீர்த்தத்தில் கரும்பு சர்க்கரை உப்பை கரைத்து செவ்வாய் பரிகாரம் என்ற பெயரில் தீர்த்த குளத்தில் உள்ள மீன்களை கொன்று குவிப்பது

தல விருட்சம் – 2000 ஆண்டுகள் பழமையான ஆதி வைத்தியநாதர் அமர்ந்து இருந்த வேம்பு மரம் தல விருட்ச்சத்தை கம்பி கொடி அமைத்து படர விடாமல் கீழே வளர விட்டு மரத்தை அழித்தது
இது மட்டும் இல்லாமல் தருமை ஆதீனத்தின் கீழ் உள்ள திருநின்றியூர் / கடவூர் மயானம் / குத்தாலம் / திருவிளநகர் / கருப்பறியலூர் / குறுக்கை வீரட்டம் / திருப்பறியலூர் வீரட்டம்
போன்ற தேவார பாடல் பெற்ற 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவாலயங்களை அழியட்டும் என்று பூசை இல்லாமல் பூட்டி வைத்து இருக்கும் தருமை ஆதினம் எங்கு சைவத்தை வளர்க்கிறது சிவாலயங்கள் அழியட்டும் என்று
அலட்சியமாக இருக்கும் தருமபுரம் ஆதினம்

திருசெங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் நாயன்மார் வீட்டிற்கு அமுது கேட்க வந்த சிவபெருமான் **உத்தராபதிஸ்வரர் சுவாமி** ஆண் மகன் இல்லாத வீட்டிற்குள் நான் வர மாட்டேன் சிறுத்தொண்டர் வந்தால் யாம் திருசெங்காட்டங்குடியில் உள்ள கணபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காட்டாத்தி மரத்திட்கு கீழ் அமர்ந்து உள்ளோம் என்று கூறி சென்ற கணபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள காட்டாத்தி மரத்தில் கீழ் உத்தராபதிஸ்வரர் அமர்ந்தார் அவ்வளவு சிறப்பான 2000 ஆண்டுகள் பழமையான காட்டாத்தி மரத்தை திருச்செங்காட்டங்குடியில் அழகாக இரும்பு பந்தல் போட்டு படர விட்டு பராமரிக்கிறார்கள்

தருமை ஆதினம் 2000 ஆண்டுகள் பழமையான சகல வியாதிகளையும் குணப்படுத்தும் வைத்தியநாதர் வேம்பு மரத்தை பாதுகாக்க முடியவில்லை

எல்லாம் அலட்சியம் நம்மை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் தருமபுரம் ஆதீனத்திற்கு ..

இதற்கு தக்க பதில் தர முடியுமா தருமை ஆதினம் / தருமை இளைய பட்டம்/ தருமை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை தம்பிரான் பதில் தர முடியுமா ???????

அனைத்து ஆதாரங்களும் படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது

தொண்டானார்க்கு எந்நாளும் சோறளிக்கும் சிறுத்தொண்டர்

உண்மையை சொன்னால் நீ வேற ஆதினத்து ஆள இல்லை / உனக்கு ஆதினம் ஆக ஆசை இருக்கா / இல்லை அவன் சீடனா / இல்லை வேற்று மதத்தினரிடம் பணம் வாங்கிட்டியா என்று கேட்பவர்களை

வீர திருத்தொண்டர் ***வரிஞ்சையூர் சத்தி நாயன்மார்*** வழியில் நாக்கை தண்டாயுதத்தினால் வழித்து கத்தியால் அறிந்து விடுவேன்

Comment here