இந்தியா

தரையை தொடாமல் நிற்கும் தூண்கள் 

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர்.

பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்ட ராமன், ஜடாயு விழுந்த இடத்திற்கு வந்து, ‘லே பாக் ஷி’ என்று கூறியதால், இந்த இடத்திற்கு, ‘லேபாக் ஷி’ என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். தெலுங்கில், ‘லே பாக் ஷி’ என்றால், ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.

மேலும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை, ராமர் பாதம் போன்றவை இக்கோவிலின் சிறப்பம்சங்கள்.கடந்த 1583ம் ஆண்டு (16ம் நுாற்றாண்டு), விஜயநகர அரசரிடம் பணிபுரிந்த, விருபண்ணா, வீரண்ணா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், அகத்தியரால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்த கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையுடன் தொடர்பின்றி,

அந்தரத்தில் தொங்குவதன் ரகசியத்தை அறிய முயன்ற, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தோல்வி அடைந்துஉள்ளனர்.ஒரு பொறியாளர், கோவில் துாணை தகர்த்து உண்மையறிய முயன்றபோது, அனைத்து துாண்களும், காற்றில் அசைந்தாடியதால், தன் முயற்சியை கைவிட்டார்.இங்குள்ள துாண்களுக்கு அடியில் துணியை நுழைத்தால், எந்தவித சேதமுமின்றி, அடுத்த பக்கத்தில் இழுத்துவிடலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

Comment here