தமிழகம்

தலசயனப்பெருமாள் கோயில்

 கல்கியின் சிவகாமியின் சபதம் படித்த யாரும் மாமல்லபுரத்தை விரும்பாமல் இருக்கஇயலாது . எத்தனை அற்புத புதினம் ! 

அதை எத்தனை முறைப் படித்தாலும் அலுக்காததுபோல் ,மாமல்லபுரமும் எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத அழகு

தலசயனப்பெருமாள் .கோயில்

பூதத்தாழ்வார் அவதரித்த தலம், .

இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.இடது கரத்தால் நம்மை “வா “என அழைப்பது போல் மடித்து வைத்துள்ளார் .
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசமாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது.
இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.
108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான்.
ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகக்கூறப்படுகிறது . அப்போது இத்தலத்திற்கு ஏழு கோயில் நகரம்’ என்ற பெயர் இருந்ததாம்
. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன என்றுக் கூறப்படுகிறது .

அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில்.
இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.

இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, அங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார்.
ஆதிசேஷனின் மீது பள்ளிகொள்ளும் பெருமாள் இங்கு மாறுதலாக தரையில் சயனிக்கிறார் ,எனவே தலசயனப்பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது
தேவிகள் அருகில் இல்லை ,புண்டரீக மகரிஷி மட்டும் வணங்கியபடி அருகில் நிற்கிறார் .பாத்த்தில் பெரியதாமரை

                                          -அண்ணாமலை சுகுமாரன் 

Comment here