பொது

தலாய்லாமாவுக்கு டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை

Rate this post
புதுடெல்லி,
திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு உடல் நலனில் சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 83-வயதான தலாய்லாமா,  மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி வந்தார்.
டெல்லியின் சாகேட் பகுதியில் உள்ள மக்ஸ் மருத்துவமனையில் உடல் நல பரிசோதனையை மேற்கொண்டார். மருத்துவமனையில் தலாய்லாமா அனுமதிக்கப்பட்டாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.
ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் பங்கேற்பதற்காக தலாய்லாமா டெல்லி வந்து இருந்தார். கடந்த திங்கள் கிழமைதான் டெல்லியில் இருந்து தர்மசாலாவுக்கு சென்ற நிலையில், மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி வந்து உள்ளார்.
 சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959 ஆம் ஆண்டு 14-வது தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

Comment here