உலகம்

தலைசிறந்த “சூப்பர் கம்ப்யூட்டர்கள்’

தலைசிறந்த “சூப்பர் கம்ப்யூட்டர்கள்’:முதலிடத்தில் சீனாவின் புதிய கணினி

உலகின் அதிவேகத் திறனுள்ள “சூப்பர் கம்ப்யூட்டர்’ பட்டியலில் சீனாவின் புதிய கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

“சன்வே தாய்ஹுலைட்’ என்ற அந்தக் கணினி, சீனாவின் தேசிய இணைவரிசைக் கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தக் கணினியால் நொடிக்கு 9300 கோடி கோடி கணக்கீடுகளை செய்ய முடியும் என்பதால் உலகின் அதிவேக 500 கணினிகளின் பட்டியலில் இது முதலிடம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே உலகின் அதிவேகக் கணினிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனாவின் தியான்ஹே-2 கணினியில், “இன்டெல்’ நிறுவனத்தின் தரவுச் செயலிகள் பயன்படுத்தப்பட்டன.

தியான்ஹே-2 கணினியைவிட தற்போது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள “சன்வே தாய்ஹுலைட்’ கணினி 3 மடங்கு வேகமும், செயல்திறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கணினியின் தரவுச் செயலிகள் (புராஸஸர்கள்) அனைத்தும் முழுக்க முழுக்க சீனாவில் வடிவமைக்கப்பட்டு, அந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் உலகின் முதல் 500 அதிவேகக் கணினிகள் பட்டியல், உலகம் முழுவதிலும் உள்ள “சூப்பர் கம்ப்யூட்டர்கள்’ எனப்படும் அதிவேகக் கணினிகளின் திறனை மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

Comment here