தமிழகம்

தல் கட்ட தேர்தல் 91 தொகுதி : 12.00 மணி ஓட்டுப்பதிவு விவரம்

Rate this post
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல்  நடத்தப்படுகிறது. மேலும் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை) துவங்கி நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.
91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம் முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
காலை 9 மணி நிலவரப்படி லட்சத்தீவில் 9.83% தெலுங்கானா 10.6%, அந்தமான்  5.83 % , அசாமில் 10.2 சதவீதமும், அருணாசலபிரதேசம் 13.3% ஓட்டுப்பதிவாகி  இருந்தது.
*  உத்தரகண்ட் – 13.34%,  பீகார் – 5%, மேகாலயா – 20.41%,  நாகாலாந்து – 21%, மணிப்பூர் – 16.09%,  மிசோரம் – 17.46%  ஓட்டு பதிவாகி இருந்தது.
* மேற்கு வங்காளம் 18.12 சதவீதம், மிசோரம்  17.5 சதவீதம், சத்தீஷ்கர் 10.2 சதவீதம், மணிப்பூர் 15.5 சதவீதம்.
* 11 மணி நிலவரப்படி தெலுங்கானா 22.84%, உத்தரகாண்ட் 23.78 % லட்சதீவு 23.10% மகராஷ்டிரா 13.7 % ஓட்டுபதிவாகி உள்ளது.
* ஜம்மு பாரமுலா தொகுதி  24.66 % மேற்கு வங்காளம் ( 2 தொகுதிகள்) 38.08 % , திரிபுரா 26.5 % ஓட்டுப்பதிவாகி உள்ளது.
* 12 மணி நிலவரப்படி மணிப்பூர் – 35.03 %, மேகாலயா – 27 %, அருணாச்சல் – 27.48%, உத்தரகாண்ட் – 23.78%, நாகலாந்து – 41%  ஓட்டு பதிவாகி உள்ளது.

Comment here