கதை

தாயின் பொங்கல்

அம்மா… … குமார் அம்மா… என்று அழைத்தபடி வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் காா்த்தி

சிறிது நேரத்தில் உள்ளிருந்துவந்த குமாரின் அம்மா

வா..ப்பா காா்த்தி எப்படிப்பா இருக்க..? பாா்த்து ரொம்ப நாளச்சு…?

நல்லா இருக்கம்மா… நீங்க எப்படி இருக்கீங்க…?

நான் நல்லா இருக்கம்ப்பா… கொஞ்ச நேரம் திண்ணையில உட்காருப்பா வர…

(உள்ளே சென்று, சிறிது நேரத்தில் வந்தார்கள் குமாா் அம்மா)

இந்தாப்பா காா்த்தி.. சாதம்வடிச்ச கஞ்சித்தண்ணி – காப்பி -டீயில போடலப்பா…

பராவாயில்லம்மா கொடுங்க… உண்மையை சொன்னா… இதுதான் உடம்புக்கு நல்லதும்மா…

சரிம்மா… எங்க குமார காணும்…

குமாராம்மா… முந்தானையில முடிஞ்சுவச்சிருந்த தன் மகன் அனுப்பிய கடிதாசிய… காா்த்தி கிட்ட கொடுத்தாங்க…

இத படிப்பா.. உன் சிநேகிதன் இந்தமுறை வரலியா… நீயே படி…

காா்த்தி கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்…

“அன்புள்ள அம்மாவிற்கு குமாா் எழுதும் கடிதம். எப்படி இருக்கீங்க அம்மா? என்ன மன்னிச்சிடுங்க அம்மா, இந்தமுறை பொங்கலுக்கு ஊருக்கு வரமுடியல… ஒரே ஒருநாள்தான் தாம்மா லீவு… என்னால வர முடியல… நீயும் அப்பாவும் கொண்டாடுங்க.. அடுத்தமுறை கண்டிப்பா வரம்மா… அப்புறம் எல்லாரையும் கேட்டதா சொல்லும்மா… உனக்கும் அப்பாவுக்கும் புது துணி எடுத்து, அனுப்பி இருக்க… நான் வரலன்னு கஷ்டபட வேணாம்மா… உங்க எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்ம்மா..
இப்படிக்கு
அன்பு மகன்
குமாா் – ” என்று காா்த்தி வாசித்துமுடிக்க, குமாராம்ம சொன்னார்கள்…

இதுக்குதாம்ப்பா காா்த்தி அரசாங்க வேலை செய்யனும்றது… தனியார் கம்பெனியில வேலை செய்தா.. லீவு கிடைக்கிறதே குதிரைக்கொம்பா இருக்கு…அவன் வராம்மா.. நாங்க எங்க பொங்கல கொண்டாறது… காலையிலேயே அவங்க அப்பா, ஒரு சின்ன வேலை இருக்குன்னு போயிட்டாரு.. நான் என்னதா செய்து.. என்னதா கொண்டாட..

சரி விடுப்பா கார்த்தி… நீயாவது குடும்பத்தோடு பொங்கல கொண்டாடு…அப்பாவையும் அம்மாவையும் கேட்டன்னு சொல்லு…

சரிம்மா.. நான் வந்த விசயத்தை சொல்ல மறந்துட்ட.. உங்களே குடும்பத்தோட, அம்மா வர சொன்னாங்க, அப்பா வந்ததும் வாங்க..

ம்….குமார்…இல்லாம்மா… நாங்க எப்படிப்பா…?

பராவாயில்லம்மா.. நீங்க இரண்டு பேரும் வாங்க… நானும் உங்க புள்ளமாதிரிதாம்மா… எங்களோடு கொண்டாடுங்க…

போன வருசம் குமார் வந்தாப்ப..நீங்க போகிப் பொங்கல் ஆரம்பிச்சு காணும்பொங்கல் வரைக்கும் எப்படி வகை வகையா செய்து… எங்க இரண்டு பேருக்கும் சலிக்காமா சமைச்சு போட்டீங்க.., எங்க வீட்டுக்கும் கொடுத்தீங்க…அதலா மறக்கமுடியாதும்மா…கண்டிப்பா வாங்க…

சரிப்பா காா்த்தி, குமாரப்பா வந்ததும் கூட்டிட்டு வர…

( காா்த்தி புறப்பட.. )

காா்த்தி… காா்த்தி… கொஞ்சம் நில்லுப்பா.. போனை மறந்துட்ட…

இதோ வரம்மா…

நல்லவேளைப்பா போன்ல சவுண்டு வந்துச்சு

இந்தாப்பா…

அது மெசேஜ் மா… ஹாப்பி பொங்கல் மெசேஜ் மா…

இதாம்பா… எது உறவையும் நட்பையும் ஒருங்கிணைக்கிறதா நினைக்கிறமோ, அதுவே நம்மை தனிமைப்படுத்திவிடுது…எல்லாம் போன்லியே முடிஞ்சுபோது…
சரிப்பா.. நீ போயிட்டு வாப்பா…

சரிம்மா… மறக்காம வந்திடுங்கம்மா..
நான் வர….

ம்… சரிப்பா… பாாத்து போ…

(ஒரு நாளோ – ஒருவாரமோ விடுமுறையை உறவோடும் நட்போடும் கொண்டாடுவோம் – விழாக்காலங்கள் கொண்டாடுவதற்கு – உறவையும் நட்பையும் தனிமைப்படுத்துவதற்கு அல்ல )

– நட்புடன் கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

Comment here