பொது

தார்பார்க்கர் பசு:

இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும். பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும். வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இவை இருக்கும். இப்பசுக்களின் எடை சுமார் 295-325 கிலோ இருக்கும். நாளொன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும். இதன் கொம்புகள் சிறியதாக பின்நோக்கியும் மேல் நோக்கியும் இருக்கும். காதுகள் பெரியதாக முன்னோக்கி தொங்கிக் கொண்டிருக்கும்.
இதர குறிப்புகள்: முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள்-1250. ஈத்து இடைவெளி – 435 நாட்கள். நன்மை செய்யக்கூடிய கொழுப்பு சத்து – 4.9%.

Comment here