அரசியல்உலகம்பிரத்யகம்

தாவுது தங்கம்: ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,104 அதிகரிப்பு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள், கரன்சி மதிப்பு சரிந்ததோடு மட்டுமின்றி தங்கம் விலையும் ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,104 அதிகரித்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,965-க்கும், சவரனுக்கு ரூ.1,104 அதிகரித்து ரூ.23,720-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்து ரூ.32,050-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.46,50-க்கும்,பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,245 உயர்ந்து ரூ.43,485-க்கும் விற்பனையாகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் எதிரொலியாக அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது ரிஸ்க் என்று கருதுகின்றனர். இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் இந்த விலையேற்றம் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Comment here