இந்தியா

திப்பு சுல்தான் இந்து சமயத்திற்கு ஆதரவாக இருந்தாரா அல்லது எதிர்ப்பாக இருந்தாரா

ஏவுகணைதொழில்நுட்பத்தின்தந்தை

திப்பு சுல்தான் இந்து சமயத்திற்கு ஆதரவாக இருந்தாரா அல்லது எதிர்ப்பாக இருந்தாரா என்ற முரண்பாட்டுச் செய்திகள்இன்றளவும் இருந்து வருகிறது

நாம் இப்போது காணப்போவது மிக முக்கியமான இரண்டு வரலாற்றுசெய்திகளை ,நமக்கு பெருமைதரக்கூடிய இரண்டு செய்திகளைமட்டும் .தான்

சில மாதங்களுக்கு முன் #பண்டைய தமிழ் மன்னர்களின்போர்முறைகள் — படை பொறிகள் ! என்று ஒரு பதிவை விட்டிருந்தேன் அதன் மீள்பதிவு இப்போதும் பெருவாரியாகப்படிக்கப்பட்டு வருகிறது அதில் நம்மிடம் இருந்த போர்க்கருவிகள் போருக்கு தேவையான பொறிகள் செய்யும் ஆற்றல் எங்கேபோனது என்று ஆராயவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் .

அத்தகைய ஆற்றலும் அறிவின் தொடர்ச்சி திப்பு சுல்தான் காலம் வரைஇங்கு இருந்ததில் தரவுகள் இப்போது கிடைத்துள்ளது .

நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை முதலில் பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது.

வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள ‘உல் விச்’ அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய v2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மாவீரன் திப்புதன்னிடம் பணிபுரிந்த முக்கிய தளபதிகள் இருவரின் துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின
ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.

திப்புசுல்தான் (1750-1799) தன்னுடைய 17 அகவை முதல் ஆங்கிலே யரை இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்கிற வீறார்ந்த குறிக்கோளுடன் 32 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் தொடர்ந்து போரிட்டு மாண்ட மாவீரன்.
ஆங்கிலேயர்கள் திப்புவை எப்படியேனும் ஒழித்திட வேண்டுமென்று பெரும் படையுடன் 1792இல் தலை நகர் ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகையைத் திப்புசுல் தானால் தகர்க்க முடியவில்லை. எனவே ஆங்கிலே யருடன் உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி மலபார், மங்களூர் பகுதிகளை இழக்க நேரிட்டது. தன் ஆட்சிப் பகுதியில் பாதியை இழக்க நேரிட்டதுடன், ரூ.3.30 கோடி பணத்தை அபராதமாகத் தரவும் ஒப்புக் கொண் டார். அப்பணத்தைத்தரும் வரையில் திப்புவின் இரண்டு மகன்களை ஆங்கிலேயர் பிணைக் கைதிகளாகப் பிடித் துச் சென்றனர்.

பணத்தை இரண்டு தவணைகளில் தந்து திப்பு தன் பிள்ளைகளை மீட்டுவந்தார். திப்பு வின் இறப்புக்குப்பின் திப்புவின் இந்த இரண்டு பிள்ளை கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். 1806இல் வேலூர் புரட்சியில் கோட்டைக்குள் பங்கேற்ற இவர்கள் ஆங்கிலேயரின் ஞூயூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை ஏற்றினர்
தீரன் சின்னமருதுவின் ஒரே மகன் துறை சாமி அயல்நாட்டில் அனாதையாக வாழ்ந்து மறைந்ததுபோல ,திப்புவின் இரு மகன்களும் வங்காளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுவடுத் தெரியாமல் மறைந்து போயினர் .

இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது ‘அக்கினிச் சிறகுகள்’ நூலில் விவரித்துள்ளார்.

”எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல.
ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்!

ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது.

திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது.

ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.”

சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவதுபொருத்தமானது தானே?

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை இந்தியாவின் திப்புசுல்தான்: என்பது பெருமைதானே !

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின்கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் அப்போது குடியரசுத் தலைவர் ஆக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையின் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.
பிறகென்ன… ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது.
திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.

எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். இந்திய அரசு, விஞ்ஞானிகளின்சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர்கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை

டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிவதாணு பிள்ளை
நன்றி கூறினாராம் .

திப்புவைப்பற்றிய இன்னமொரு சிறப்பான செய்தியை அடுத்தப்பதிவில் கூறுகிறேன் .இப்போதே நீண்டுவிட்டது . நன்றி !#அண்ணாமலைசுகுமாரன்

Comment here