அரசியல்

திமுகவில் கோஷ்டிப் பூசல்: முதல்வர் பேச்சு

திமுகவில் கோஷ்டிப் பூசலை கண்கூடாகப் பார்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நகராட்சிகள், ஊரக உள்ளாட்சிகள் தொடர்பான மசோதாவை எதிர்த்து, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்கள் பேச முற்பட்டனர்.

முன்வரிசையில் இருந்த திமுகவினர், அந்தக் கட்சியின் எஸ்.ஆர்.ராஜாவை பேச அழைத்தனர். அப்போது, மற்றொரு உறுப்பினரான எ.வ.வேலு எழுந்து பேசினார். இதனால், பேரவையில் சிறிய குழப்பம் ஏற்பட்டது.

இதனை பார்த்துக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, “எதிர்க்கட்சியில் கோஷ்டிப்பூசல் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதனை கண்கூடாகப் பார்க்கிறேன்.

கோஷ்டிப் பூசலுக்கு பேரவைத் தலைவர் பொறுப்பேற்க முடியாது. முதலில் ராஜா பேசுவார் என்று அந்தக் கட்சியின் கொறடா கூறுகிறார். ஆனால், எ.வ.வேலு எழுந்து பேசுகிறார்.

அவரை அமரும்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறுகிறார். ஆனால் அவர் பேசி முடித்து விட்டார். அதன் பிறகு எஸ்.ஆர்.ராஜாவுக்கு பேச அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்கள். இவர்களால் அவர்கள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பேரவைத் தலைவர் எப்படிக் கட்டுப்படுத்துவார்’ என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

Comment here