தியாகி ராமசாமி 101வது பிறந்தநாள் : அரசு விழாவுடன் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

Rate this post

தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ராமசாமியின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ராமசாமி சிலை அமைக்க அடிக்கல் நாட்ட உள்ளார்.

தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ராமசாமி தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும் இருந்தது. தமிழக சட்டமன்றத்துக்கு ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிப்பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமியின் திறன் அறிந்து 1954ல் தனது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.

1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார். நாட்டுக்காக பல ஆண்டுகள் பொது தொண்டு செய்த ராமசாமியை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சில முயற்சிகளை முன்னெடுப்பு செய்தது. அதன்படி, சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், தமிழக முதல்வர் பழனிச்சாமி நாளை மறுநாள் ராமசாமியின் 101 வது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், அவரது சிலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*