ஆன்மிகம்

திருச்சானூரில் தெப்போற்சவம்

                        திருச்சானூரில் நடைபெற்று வரும் தெப்போற்சவத்தில், பத்மாவதி தாயார் தெப்பத்தில் வலம் வந்தார்.

                              திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, திருச்சானூரில் உள்ள பத்ம சரோவரம் திருக்குளத்தில் 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.

தெப்போற்சவத்தை ஒட்டி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை உள்ளிட்ட சேவைகளை கோயில் நிர்வாகம் ரத்து செய்திருந்தது. திங்கள்கிழமை பௌர்ணமியன்று தெப்போற்சவம் நிறைவு பெறுகிறது.

Comment here