அரசியல்

திருப்பூரில் பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்டப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அரசு விழாவில் பங்கேற்பு

Rate this post

திருப்பூரில் பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்டப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அரசு விழாவில் கலந்து கொண்டார்கள்.

அப்போது பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.

திருப்பூரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் திருப்பூர் வந்தார். அவர் திருப்பூர் பெருமாநல்லூர் அருகே தயார் படுத்தி இருந்த விழா மேடையில் அரசு திட்டங்களை துவக்கி வைத்தார்.

அவருடன் கவர்னர் பண்வாரிலாள் புரோகித, சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர், உடுமலைகிருஷ்ணன், திருப்பூர் எம்.pi.சத்யபாமா, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் ஆகியோர் மேடையில் இருந்தனர். தலைமை செயலாளர கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் எஸ். பி.வேலுமணி, விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., க்கள் திருப்பூர் தெற்கு சு.குணசேகரன், பல்லடம் கரைபுதூர் நடராஜன், காங்கேயம் தனியரசு, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை, புதிதாக கட்டமைக்கப்பட்ட திருச்சி விமான நிலையம், நவீன மயமாக்கப்பட்ட சென்னை விமான நிலையம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் அவர் சென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ESIC மருத்துவ கல்லூரியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்துடன் அவர் சென்னை என்னூறில் கடற்கரை துறைமுகம், சென்னை எண்ணூர் முதல் மணலி வரை கச்சா எண்ணெய் குழாய் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இத்துடன் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவையையும் அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக 3.05 மணிக்கு ஹெலிகாப்டரில் வருகை தந்த மோடி, 3.15 மணிக்கு விழா மேடைக்கு வந்தார்.

விழாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களின் விளக்க வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக 3 ஐ.ஜி கள் தலைமையில் 17 போலீஸ் எஸ்.பிக்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர் பொது கூட்டத்தில் பங்கேற்க சென்றார்

Comment here