அரசியல்

திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நடத்திய போராட்டம்

Rate this post

திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக நடத்திய போராட்டத்தில் பாரத் மாதா கீ ஜெ முழக்கம் எழுப்பியபடி செருப்பால் அடிக்க முயன்ற பாஜக பெண் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை கைது செய்வதை கண்டித்து மதிமுக தொண்டர் மின்கோபுரத்தில் ஏறி போராடியதால் பரபரப்பு நிலவியது.

விஒ பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சி யினர்கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். கஜா புயல், காவிரி உள்ளிட்ட தமிழக வாழ்வாதார பிரச்சணைகளில் பிரதமர் மோடி தமிழத்திற்கு துரோகம் செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார். கருப்பு கொடிகளுடன் நூற்றுக்கணக்கனோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். வைகோ பேசிக்கொண்டிருந்த போது பாஜகவை சேர்ந்த சசிகலா என்பவர் பாரத் மாதா கீ ஜெ முழக்கமிட்டார். மேலும் போராட்டக்காரர்களை செருப்பால் அடிக்க முயன்ற சசிகலாவை மதிமுக தொண்டர்கள் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. கற்கள் வீசியதில் மதிமுகவினரின் ஒரு கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து காவல் துறையினர் சசிகலாவை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் சசிகலா மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போராட்டத்தின் போது காவல் துறையினர் கைது செய்ய முயன்றதால், வைகோ 3 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த திலகர் என்ற மதிமுக தொண்டர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் வைகோ வேண்டுகோளை ஏற்று திலகர் அரை மணி நேரத்திற்கு பின் கீழே இறங்கினார்.

இதனிடையே தொண்டர்களிடம் பேசிய வைகோ, சுதந்திர இந்தியா கண்டிராத துரோகங்களை பிரதமர் மோடி செய்துள்ளார் என குற்றம்சாட்டினார். காவிரி, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சணைகளில் தங்க முடியாத துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளதாகவும், சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது எனவும் அவர் கூறினார். தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி எனவும், எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் எனவும் கூறிய அவர், வைகோவை சீண்டி பார்க்காதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார். மோடி மீது எனக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை எனவும், தமிழகத்தை அழிக்க நினைப்பதால் எதிர்க்கிறேன் எனவும் வைகோ கூறினார்.

தான் இந்த மண்ணின் வேலைக்காரன் எனவும், உயிருள்ள வரை தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.மத நல்லிணக்கத்தை கெடுக்க இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கின்றன எனவும், மத மோதலை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.அணை பாதுகாப்பு மசோதா வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும். இம்மசோதா வந்தால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும் எனவும் கூறிய அவர், மதிமுக கட்சியை உயிராக நேசிப்பதாகவும், உயிரை விட தமிழக மக்களை நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்திற்கு பின்னர், கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே திருப்பூரில் கருப்பு கொடி காட்ட வந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த ராமசாமி என்பவரை, இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனகடையே பிரதமர் மோடி வருகைக்கு ஆதரவாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் காவி கொடி போராட்டம் நடத்தினர். அப்போது கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுகவின் கொடியை எரித்து கண்டனம் தெரிவித்தனர்

Comment here