ஆன்மிகம்

திருவண்ணாமலை

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்
தொடங்கியது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ஆம் தேதி
அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார்
கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது திருக்கார்த்திகை தீபத்திருவிழாவாகும், கடந்த 1 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 10 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்
இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்ல வருவார்கள்.

பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் காலையும் மாலையும் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தியம்மன், சண்டிகேஷ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

டிசம்பர் 10 ஆம் தேதி அதிகாலையில்கோயிலின் கருவரையின் முன்பாக
பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள
அண்ணாமலையார் மலையின் மது மகா தீபமும் ஏற்றப்படஉள்ளது.

Comment here