Sliderஆன்மிகம்

 திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்;

திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது தொடர்ந்து வழங்கி வரும் ஒரு பழஞ்சொல் ஆகும் . அப்பரது சம்பந்தரது தேவாரங்களின் பதிகங்களில் காணாத ஒரு ஈரத்தை, ஒரு நெகிழ்வை, அதிக கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காணமுடியும் திருவாசகப்பாடல்கள் உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். வலிமைப்பெற்றது
அழுதால் பெறலாமே என்று உருகிக்கூறுவார் . உணர்வின் வலிமை அறிந்த
மணிவாசகப பெருமான்

திருவாசகத்துக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை;

அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் “திருக்கடைக்காப்புப்பகுதியில், “இவை எழுதியது, அழகியதிருச்சிற்றம்பலமுடையான் எழுத்து” என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; இத்தகைய பெருமைகள் பல கொண்ட இந்த நூலை நம்பியாண்டார் நம்பி எனும் மாமனிதர் , மாமன்னர் இராஜராஜன் துணைக்கொண்டு , தில்லைக்கோயிலில் இருந்து மீட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் ,அவைகள் ஓலைச் சுவடிகளில் இருந்தமையால் அவை பெருவாரியான மக்களை சென்றடையவில்லை .

தமிழ்க் கல்வி பரவிய வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்விபயிற்றுவித்தல் அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.

இந்தச் சூழலில் முதன்முறையாக திருவாசகத்தை அச்சில் பதிப்பித்தவர்திரு
.சிவக்கொழுந்து தேசிகர்ஆகும் . அச்சில் பதிப்பித்தல் என்பது அத்துணை எளியக்காரியம் அல்ல .ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரே.

ஏடுகளில் இருந்த இத்தகைய அரிய தமிழ்ச் செல்வங் களை அப்போதைய தமிழ் அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும்இத்தகைய கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது., நமக்கெல்லாம் பயிலும் வாய்ப்பு கிட்டியி ருக்குமா என்பது ஐயமே .

சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன.
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும். சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் அனுபவமும் ,அறிவும் அதிகம் தேவை .
திருவாசகத்தை முதல் முதலில் பிழைத்த திருத்தி அச்ச்சில் கொண்டுவந்த ,
திரு .கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அவர்கள் தமிழ்நாட்டில் கும்பகோணம் என்ற ஊருக்கு அருகில் உள்ள. ஏரண்ட புரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏரண்டம் என்பதற்கு ஆமணக்கு என்ற கொடியின் கொட்டை என்பது பொருள் ஆகும்
இப்போது அந்த ஊர் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது .
எதில் இருந்து எது வந்தது என்பது ஆய்வுக்கு உரியது .

இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்
கொட்டையூருக்குத் தெற்கில் உள்ள ஊர் சத்திமுற்றம்.ஆகும் அங்குள்ள இறைவன் பெயர் சிவக்கொழுந்து, இந்த இறைவன் பெயரையே தன் மகனுக்கும் இட்டார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார்.இந்தக்குடும்பம் சுமார் 300 ஆண்டுகளுக்கு அதிகமாக
அந்த ஊரில் வசித்து இருந்ததாகக் கூறப்படுகிறது .இவரது ஆசிரியர்களாக
திரு வைத்திநாத தேசிகர் வம்சத்தினரும் , மற்றும் சில திருவாரூரில் இருந்த பெரும் புலவர்களும் அமைந்திருந்தனர் .
நிலம் வீடு போன்ற வசதிகள் இருந்ததால் இறைவழிபாடும் , மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் , சிறு நூல்கள் செய்வதுமாக இவரது இளம் வயது கழிந்தது .

இவரது அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார்.
முகலாய மன்னர்களின் ஆதிக்க ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் சிவாஜி என்ற மராட்டிய மன்னர். சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி. இவர் ஏகோஜி என்றும் அழைக்கப்பட்டார். ஏகோஜி தஞ்சாவூரில் 1674-ஆம் ஆண்டில் மராட்டிய அரசை நிறுவியவர் ஆவார். அன்று முதல் 180 ஆண்டுகளில் 14 மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டு வந்துள்ளனர்.மராட்டிய மன்னர்களுள் ஒருவர் துளஜாஜி. இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ஓர் ஆண் குழந்தையை மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்குத் தன் விருப்பக் கடவுளின் பெயரை இட்டார்.அவரது விருப்பக் கடவுள் திரிபுவனம் சரபேசர்.ஆகும் இதைச் சரபோஜி என்று அந்தக் குழந்தைக்குபெயராக இட்டார். ஆனால், இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் மூன்று மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே இவர் நான்காம் சரபோஜி ஆவார்.

சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், இவருக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. கலைகளில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. எனவே, ஆங்கிலக் கம்பெனியாருடன் உடன்பாடு செய்துகொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.
தஞ்சாவூரில் சரசுவதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உடையவராகச் சரபோஜி மன்னர் திகழ்ந்தார்.இந்த நூல் நிலயத்தைப்பரமரிக்க
சரபோஜி மன்னர் திரு

திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது தொடர்ந்து வழங்கி வரும் ஒரு பழஞ்சொல் ஆகும் . அப்பரது சம்பந்தரது தேவாரங்களின் பதிகங்களில் காணாத ஒரு ஈரத்தை, ஒரு நெகிழ்வை, அதிக கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காணமுடியும் திருவாசகப்பாடல்கள் உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். வலிமைப்பெற்றது
அழுதால் பெறலாமே என்று உருகிக்கூறுவார் . உணர்வின் வலிமையோ அறிந்த
மணிவாசகப பெருமான்

திருவாசகத்துக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை;

அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் “திருக்கடைக்காப்புப்பகுதியில், “இவை எழுதியது, அழகியதிருச்சிற்றம்பலமுடையான் எழுத்து” என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; இத்தகைய பெருமைகள் பல கொண்ட இந்த நூலை நம்பியாண்டார் நம்பி எனும் மாமனிதர் , மாமன்னர் இராஜராஜன் துணைக்கொண்டு , தில்லைக்கோயிலில் இருந்து மீட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் ,அவைகள் ஓலைச் சுவடிகளில் இருந்தமையால் அவை பெருவாரியான மக்களை சென்றடையவில்லை .

தமிழ்க் கல்வி பரவிய வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது. ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்விபயிற்றுவித்தல் அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.

இந்தச் சூழலில் முதன்முறையாக திருவாசகத்தை அச்சில் பதிப்பித்தவர்திரு
.சிவக்கொழுந்து தேசிகர்ஆகும் . அச்சில் பதிப்பித்தல் என்பது அத்துணை எளியக்காரியம் அல்ல .ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் சிவக்கொழுந்து தேசிகரே.

ஏடுகளில் இருந்த இத்தகைய அரிய தமிழ்ச் செல்வங் களை அப்போதைய தமிழ் அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும்இத்தகைய கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது., நமக்கெல்லாம் பயிலும் வாய்ப்பு கிட்டியி ருக்குமா என்பது ஐயமே .

சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன.
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும். சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் அனுபவமும் ,அறிவும் அதிகம் தேவை .
திருவாசகத்தை முதல் முதலில் பிழைத்த திருத்தி அச்ச்சில் கொண்டுவந்த ,
திரு .கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அவர்கள் தமிழ்நாட்டில் கும்பகோணம் என்ற ஊருக்கு அருகில் உள்ள. ஏரண்ட புரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஏரண்டம் என்பதற்கு ஆமணக்கு என்ற கொடியின் கொட்டை என்பது பொருள் ஆகும்
இப்போது அந்த ஊர் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது .
எதில் இருந்து எது வந்தது என்பது ஆய்வுக்கு உரியது .

இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்
கொட்டையூருக்குத் தெற்கில் உள்ள ஊர் சத்திமுற்றம்.ஆகும் அங்குள்ள இறைவன் பெயர் சிவக்கொழுந்து, இந்த இறைவன் பெயரையே தன் மகனுக்கும் இட்டார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார்.இந்தக்குடும்பம் சுமார் 300 ஆண்டுகளுக்கு அதிகமாக
அந்த ஊரில் வசித்து இருந்ததாகக் கூறப்படுகிறது .இவரது ஆசிரியர்களாக
திரு வைத்திநாத தேசிகர் வம்சத்தினரும் , மற்றும் சில திருவாரூரில் இருந்த பெரும் புலவர்களும் அமைந்திருந்தன .
நிலம் வீடு போன்ற வசதிகள் இருந்ததால் இறைவழிபாடும் , மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் , சிறு நூல்கள் செய்வதுமாக இவரது இளம் வயது கழிந்தது .

இவரது அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார். முகலாய மன்னர்களின் ஆதிக்க ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் சிவாஜி என்ற மராட்டிய மன்னர்.
சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி. இவர் ஏகோஜி என்றும் அழைக்கப்பட்டார். ஏகோஜி தஞ்சாவூரில் 1674-ஆம் ஆண்டில் மராட்டிய அரசை நிறுவியவர் ஆவார். அன்று முதல் 180 ஆண்டுகளில் 14 மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டு வந்துள்ளனர்.மராட்டிய மன்னர்களுள் ஒருவர் துளஜாஜி. இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ஓர் ஆண் குழந்தையை மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்குத் தன் விருப்பக் கடவுளின் பெயரை இட்டார்.அவரது விருப்பக் கடவுள் திரிபுவனம் சரபேசர்.ஆகும் இதைச் சரபோஜி என்று அந்தக் குழந்தைக்குபெயராக இட்டார். ஆனால், இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் மூன்று மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே இவர் நான்காம் சரபோஜி ஆவார்.
சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், இவருக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. கலைகளில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. எனவே, ஆங்கிலக் கம்பெனியாருடன் உடன்பாடு செய்துகொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.
தஞ்சாவூரில் சரசுவதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உடையவராகச் சரபோஜி மன்னர் திகழ்ந்தார்.இந்த நூல் நிலயத்தைப்பரமரிக்க
சரபோஜி மன்னர் திரு சிவக்கொழுந்து தேசிகர்அவர்களை அழைத்து நூலகப்பொறுப்பைத்தந்தார் .
அங்கு இருக்கும்போது சிவக்கொழுந்து தேசிகர்
பல மருத்துவ நூல்களையும் கவிதை வடிவில் இயற்றினார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய இலக்கிய நூல்கள்

1)கொட்டையூர் உலா
2)திருவிடைமருதூர்ப் புராணம்
3)திருமண நல்லூர்ப் புராணம்
4)சரசக் கழிநெடில்
5)கோடீச்சுரக் கோவை
6)தஞ்சைப் பெருவுடையார் உலா
7)ஸ்ரீ சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்.
இவ்வாறு, பல சிறப்புகளை உடைய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்களில் ஒன்றே சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும்.
இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சரபோஜி மன்னர். ஆகும்

சென்னை மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேய அரசு கல்விச் சங்கம் என்று ஒரு சங்கத்தை அமைத்துத் தமிழ்ப் புலவர்களை வரவழைத்துப் பழைய நூல்களை ஏடுகளில் இருந்து ஆய்வுகள் செய்து பதிப்பித்தனர். புதிய நூல்களும் இயற்றப்பட்டன.

அப்போது கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரின் புலமையைக் கேள்வியுற்ற ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அந்தக்கல்விக்கழகத்திற்கு அனுப்பப் கேட்டுக்கொண்டது .இத்தைத்தட்ட இயலாத சரபோஜி மன்னரும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகராய் சென்னைக்கு அனுப்ப சம்மதித்தார் .

சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப்புலவரான வித்துவான் தாண்டவராய முதலியாருக்கு உதவியாககொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் உடனிருந்து பணி செய்து வந்தார்.
சென்னையில் இருந்தபோதுதான் ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார்
.இதுவே இவரின் பணிகளில் தலையானது . திருவாசகம் நம் அனைவரும் படிக்க , காரணமாக இருந்தது திரு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் போன்ற தலை சிறந்த மனிதர்களின் அயராத முயற்சிதான் .
ஆயினும் அவருக்கு நாம் தரவேண்டிய மதிப்பை நல்கவில்லை .
இது தமிழரின் குறையாகும் .
90 ஆண்டுகள் வரை வாழ்ந்த சிவக்கொழுந்து தேசிகருக்கு இரு மனைவியர். இரு ஆண்மக்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர். முதல் மனைவியாருக்குப் பிறந்த வடுகநாததேசிகரின் பெயரனான சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரரே காசிவாசி சுவாமிநாத தேசிகர் ஆவார்.
உ.வே.சா. அவர்கள் தமது சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் பதிப்பில் இவற்றை விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் . .அந்தப்புத்தகதையைப்பார்த்தே நான் இந்த வரலாற்றை எழுதினேன் .1932 இல் வெளிவந்த அந்தப்புத்தகத்தின் நகல் என்னிடம் உள்ளது .

திருவாசகத்தின் பெருமைக்குறித்து எத்தனை சொன்னாலும் நிறையுண்டாகாது .ஆயினும் ஒரே ஒரு பாடலை சொல்லி இதை நிறைவு செய்யலாம் .

போற்றி அகவல் – திருவாசகம்

“பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி
” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி
” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி
” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி
” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி
நம் உடலில் ஐம் பூதங்களும் எந்த விகிதத்தில்
கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது

பாரிடை ஐந்தாய் = மண் – 5 பாகங்களாக –
மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக

நீரிடை நான்காய் = நீர் = 4 பாகங்கள் –
கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக

தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் –
சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக
வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் –
பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக
வெளியிடை ஒன்றாய் = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாக
எத்தனை அனுபவங்களை உணர்வுடன் தெரிவிக்கும் தேன் திருவாசகம் .

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

– வடலூர் ராமலிங்க அடிகளார்

Comment here