பிரத்யகம்

திருஷ்டி எப்படிக் கண்டுப்பிடிப்பது ?

Rate this post

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது ஆணி மாட்டிக்கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம்.

திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டிச் சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்க கடல் நீர் மிகவும் ஏற்றது. அதுவும் அமாவாசையில் கடல் நீரால் கழிக்க நல்ல பலன் உண்டாகும். வீட்டில் எல்லா முக்குகளிலும் இந்தக்கடல் நீரைத்தெளித்துப்பின், சாம்பிராணிப் புகையோ அல்லது ஊதுவத்தியோ உபயோகிப்பது நல்லது.

திருஷ்டிக் கழிப்பதில் பல வகைகள் உண்டு. திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் சாக்கடையில் போடலாம். ஒருவரும் இதற்குக் கிடைக்கவில்லை என்றால், நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம். இரண்டாவதாக எலும்மிச்சம் பழத்தை வெட்டி, நடுவில் குங்குமம் தடவி இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு வலது பக்கமாக மூன்றுதரம் சுழட்டி பின் இடதுப்பக்கமாக மூன்றுதடவை சுழட்டி அந்த எலுமிச்சைப் பழங்களை ஒருவர் காலிலும் படாதபடி எதாவது புதர்ப்பக்கம் வீசிப்போடலாம். அடுத்ததாக இதற்கு உபயோகப்படுவது பூசனிக்காய். பூசனிக்காயின் நடுவில் குங்குமம் வைத்து, அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை உச்சிவேளையில் அந்தப் பூசனிக்காயினால் சுற்றி நான்கு சாலை கூடுமிடத்தில் உடைத்துவிடுவது திருஷ்டியைப்போக்கும்.

சிலர் திருஷ்டி வராமல் இருக்க யானைவால்முடி அணிவார்கள். சிலர் காசி பைரவகயிறும் அணிவார்கள். வீட்டின் முன்புறம் கற்றாழைச்செடி வைப்பதும் திருஷ்டி தோஷத்தைப்போக்கும் என ஒருவர் சொன்னார்.

மஞ்சள் நிறத்திற்குத் திருஷ்டியைப்போக்கும் சக்தி உண்டாம். ஆதலால் வீட்டின் முன் புறம் இருக்கும் கேட்டில் மஞ்சள் வண்ணத்தை அடித்து வைத்தல் நல்லது.
நாம் புதிதான ஆடைக்கட்டிக்கொண்டால், அதிலும் திருஷ்டிப்படிய வாய்ப்பு உண்டு. அதனால் அதைத் துவைத்தோ அல்லது வேறுவிதமாகச் சுத்தப்படுத்தியோ வைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் கண்திருஷ்டி வினாயகர் என்ற படமே கிடைக்கிறது. அதிலே வீட்டில் எப்படி எந்தத்திசையில் மாட்ட வேண்டும் என்ற குறிப்பும் இருப்பதால் கவலையில்லை.

சீன வாஸ்துவின்படி வீட்டில் நுழைந்தவுடன், ஒரு நிலைக்கண்ணாடி இருப்பது இந்தத் திருஷ்டியைப் போக்க வல்லது. திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். தனியாகவும் நின்று இதை ஏற்கலாம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நின்று இதைச் செய்துக்கொள்ளலாம். நாடகம் நடத்துபவர்கள் நாடகம் முடிந்தவடன் முழு குழுவையும் மேடையில் நிற்க வைத்துப் பூசனிக்காயால் திருஷ்டிச் சுற்றுவதை இன்றும் காணலாம்.

மனிதர்கள் இடையே அன்பு அதிகமாகி பொறாமை பேராசை போன்றவைகள் ஒழிய ஒருவருக்கும் திருஷ்டியே படாது. அந்த நாள் வருமா…?

கண்ணேறுபடுதல்- கண்திருஷ்டி என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது. உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதனை பொதுக்கருத்தாக எண்ணி சென்னை மாநகராட்சி கண்ணில் படும் சுவரிலெல்லாம் வண்ணமயமான காட்சிகளை வாரி இரைத்துள்ளனர். இதைக் கண்டு சென்னை மாநகரம் பெருமிதம் கொள்கிறது. குப்பைமேடுகள் திடீரென தோன்றினாலும் அதன் பின்னும் அழகிய வண்ணவண்ண காட்சிகள்! அதிலும் பல மந்திர- தந்திர- யந்திர காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இதை பிற மாநகராட்சிகள் கடைப்பிடித்தால் வாஸ்து குறைகள் அகன்றுவிடும்.

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது அனுபவ பழமொழி. ஒரு நாட்டுப் புறப் பாடலைப் பாருங்கள்.

“கண்ணான கண்ணனுக்கு
கண்ணூறு பட்டுச்சுன்னு
சுண்ணாம்பும் மஞ்சளும்
சுத்தியெறி கண்ணனுக்கு

மிளகாயும் உப்பும்

வீசியெறி கண்ணனுக்கு.’

பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, குழந்தையின் தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.

ஜெர்மனியில், கால்நடைகளுக்கு ஆத்மா இல்லை என்றும்; எனவே அது அந்த எஜமானர்களுக்கும் வீட்டாருக்கும் வரும் தீவினைகளையும் ஏவல்களையும் தடுத்து நிறுத்திவிடும் என்றும் நம்புகின்றனர். நாமும் சனியின் பார்வை, கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் தொல்லைகள் விடை கொடுக்கும்.

தீய பார்வையுடையோர் கால்நடைகளைப் பார்ப்பதால் அவற்றுக்கு நோய் உண்டாகும் என்பார்கள். பசுக்கள் திடீரென்று பால் கறப்பதைக் குறைக்கும். இதற்குப் பரிகாரமாக சங்கஞ்செடியின் முள்ளை கிளையுடன் ஒடித்து வந்து, பால் கொடுக்கும் காம்பில் தடவி மந்திரம் சொல்வார்கள். நொச்சி இலையை கிளையோடு தடவினாலும் கண் திருஷ்டி அகன்றுவிடும். இவையாவும் கால்நடை மருத்துவர்கள் உருவாவதற்குமுன் ஈடேறியவை. எப்படியாவது உயிரையும் மிருகத்தையும் காப்பாற்ற, “பட்ட கண்ணு, பாழுங்கண்ணு, கொடுங்கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒரு கண்ணும் படக்கூடாது; பட்டிருந்தாலும் விலகிப்போ’ என ஓதுவார்கள்.

“ஓம் மாதங்கி, ஓம் பரமேஸ்வரி, பார்வதி, லட்சுமி, கொம்போடே வந்த கோமாரி, அழல் வெக்கை, சீத வெக்கை தோன்றும் எப்பேற்பட்ட வியாதியெல்லாம் நான் ஓதிய தண்ணீரோடு போகப் போக சுவாகா’ என்று மந்திரம் சொல்லி மாடுகளுக்குத் தண்ணீரைப் பருகச் செய்வார்கள்.

புல்லும் தண்ணீரும் ஓதிக்கொடுக்க கால்நடை யந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த யந்திரத்தை மாட்டுத் தொழுவங்களில் எழுதி வைத்தால் மாடுகள் காணாமல் போவதில்லை. புல் மேயச் சென்ற மாடுகள் மாலையில் தொழுவம் வந்துவிடும்.

மாதர்களுக்கு…

சிலருக்கு குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் சரியாகச் சுரப்பதில்லை. திருஷ்டி ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அதற்கான எண் யந்திரத்தை வெள்ளித் தகட்டில் சிறிதாக எழுதி, இடுப்பில் தாயத்தாகக் கட்டிக் கொண்டால் திருஷ்டிகள் அகன்றுவிடும். அடிக்கடி அழுத பிள்ளையும் சுகம் பெறும். இதை வெள்ளை அட்டையில் எழுதி வைத்துக் கொண்டாலும் போதுமானது.

பிரசவ நாளில் அந்த அறையில் சிறிது பாலும் வெள்ளை சர்க்கரையும் கலந்து வைத்து, பிரசவம் முடிந்ததும் அந்தப் பாலை அரச மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால், பிரசவகால திருஷ்டிகளிலிருந்து விடுபடலாம்.

கண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை இன்றைய விஞ்ஞான உலகமும் ஒப்புக் கொண்டிருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் திருஷ்டி தோஷம் எனக் குறிப்பிட்டார்கள். இவ்வளவு அழகாக வீடுகட்டி விட்டார்களே என்று பொறாமையுடன் யாராவது பார்த்தால், இந்த திருஷ்டி தோஷம் ஏற்படும். இதனால் நமக்கும் பாதிப்புகள் வராமல் இருக்க பூசணிக்காய் தொங்கவிடுவர். புதுவீட்டை பார்ப்பவர் கண்களில் பூசணிக்காயும் அதில் வரைந்துள்ள வடிவமும் சிறிது நேரம் படும். புதுவீட்டை முழுமையாகப் பார்ப்பதில் இருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டிதோஷம் குறையும் என்றனர்.

3 எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவது எப்படி?

ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால்,காந்த கதிர்வீச்சு cell phone கதிர்வீச்சு வீட்டில் எப்போதும் நிலவும் ஒரு சில மாற்றங்கள் அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவதோடு, உறவுகளுக்குள் பிரச்சனைகள் குழந்தைகள் உள்ள வீட்டில் மிகவும் அவசியம் மற்றும் மண குழப்பம் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இதுவரை வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா என்பதை பார்ப்போம் ஆற்றல் எப்படி என்பதை பார்ப்போம்.

இப்போது இந்த கட்டுரையில் எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம். பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும்.

சரி, இப்போது பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று காண்போம்.

#வழி_ஒன்று

இது மிகவும் எளிய வழி. இந்த வழியில் 3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.

#வழி_இரண்டு

மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்.

#வழி_மூன்று

ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

#வழி_நான்கு

வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

#வழி_ஜந்து

ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

#வழி_ஆறு

வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

#வழி_ஏழு

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்…

Comment here