தமிழகம்

துப்பாக்கியுடன் வங்கியில் புகுந்து மிரட்டிய சாமியார் கைது…!

Rate this post

வங்கியில் புகுந்து  துப்பாக்கியுடன் மிரட்டிய சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி மின்னல் சங்கம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார்.

சாமியார் கைது

இந்நிலையில், இவர் துப்பாக்கியுடன் சென்று மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஊழியர்களை மிரட்டி இருக்கிறார். மேலும், அங்கேயே அமர்ந்துக்கொண்டு புகை பிடித்திருக்கிறார்.

இதை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாமியார் திருமலையை கைது செய்துள்ளனர்.

Comment here