தூக்கம் இல்லாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் டிப்ஸ் இதோ!

Rate this post

மனித உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது தூக்கம். இந்த தூக்கம் உயிர்களின் புத்துணர்ச்சி யாகும். அளவான தூக்கம் உற்சாகத்தை தரும். அதிக தூக்கம் சோம்பேறித்தனமாகும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம். அதிக தூக்கம், குறைவான தூக்கம் பல்வேறு நோய்களை உருவாக்கலாம். தூக்கமின்மை என்பது இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வராமல் விழித்திருப்பது, அல்லது தேவையான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது ஆகும். இது ஒரு மருத்துவ அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. தூக்கமின்மைக்கு பின்னால் மருத்துவ காரணங்களும், மனநல காரணங்களும் இருக்கலாம். தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தூக்கமின்மை (Insomnia, இன்சோம்னியா) என்பது ஒரு நோயின் அறிகுறி. தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகிற கோளாறுகளினால் ஏற்படும் நோயாகும். தூக்கமின்மையால் மறதி, மனச்சோர்வு, பேச்சு, செயல்பாடுகளில் எரிச்சல், இருதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்கமில்லாதவர்களில் பலர் மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கத்திற்கும் ஆளாகின்றனர்.

ஆனால் இயற்கையாகவே சில உணவு பொருட்கள், தூக்கத்தை தூண்டும். அவைகளில் சில இதோ,

1. சூடான பால்:

ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சூடான பால், தூக்கத்தை தூண்டும் உணவு என்று நம்பப்படுகிறது. பாலில் உள்ள ட்ரிப்டோபான் என்ற அமிலம், மூளையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்துவதால், நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது. இஞ்சி கலந்த பாலும் தூக்கத்தை தூண்டுவதாக இருக்கிறது.

2.செர்ரி:

செர்ரியில், மெலடோனின் இருப்பதால் தூக்கத்தை ஏற்படுத்தும் அணுக்களை தூண்டுகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும் செர்ரிப்பழம் உதவுகிறது. ஒரு நாளைக்கு 10ல் இருந்து 12 செர்ரி பழம் சாப்பிட்டால், இரவு நன்றாக தூக்கம் வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3.பாதாம்:

மூளையின் செயல்திறனை அதிகரிப்பதற்கு பாதாம் உதவியாக இருந்தாலும், நன்றாக தூங்குவதற்கும் உதவியாக இருக்கிறது. பாலில் இருப்பது போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபான் இருப்பதால், தூக்கத்தை தூண்டுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடுவது, தூக்கத்தை ஏற்படுத்தும்.

4.சாக்லேட்:

தூக்கத்தை துண்டும் உணவு வகைகளில் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் நரம்பில் உள்ள தூக்கத்தை ஏற்படுத்தும் அணுக்களை தூண்டுகிறது. ஆனால், அதிகமான அளவில் சாக்லேட் உண்ணக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

5.வாழைப்பழம்:

தூக்கத்தை தூண்டுவதில் வாழைப்பழமும் உதவியாக இருக்கிறது. தசைகளை ஆசுவாசப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் வாழைப்பழம் இயற்கையாகவே தூக்கத்தை தூண்டுகிறது.

6.ஓட்ஸ்:

உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும் ஓட்ஸ், மனிதன் தூங்குவதற்கும் உதவுகிறது. ஓட்ஸ் உடன், சிறிது தேன் கலந்து சாப்பிடுவதன்மூலம், ஒருவர் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி

* வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

* முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

* மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்.

* மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத் தில் தினமும் 2கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

* மணலிக் கீரையை உலர் த்திப் பொடியாக்கி தின மும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும்.

* 20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*