தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் நடந்த தீண்டாமை சம்பவம் – கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்

Rate this post

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளி மாணவர்களுக்கு தேன்மிட்டாய் தரக்கூடாது, ஊர் கட்டுப்பாடு விதித்திக்கப்பட்டிருக்கிறது, இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வரக்கூடாது என்று கடைக்காரர் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடைக்காரர்கள் கைது

இதனையடுத்து கடைக்காரர்கள் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதன் பின்பு அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கரிவலம் வந்த நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் மாற்றம்

இந்நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

 

Comment here