தேசிய யோகா போட்டி  தமிழக அணிக்கு கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் தேர்வு

Rate this post

                     அண்மையில் இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் நடத்தும்  தேசிய யோகா போட்டிக்கான தேர்வு போட்டி 12.10.18 மற்றும் 26.10.18 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் U-14,U-17,U-19 ஆகிய பிரிவுகளில் 32 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும்  80 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பரணி பார்க் பள்ளி மாணவர் U-14 பிரிவில் S.கபிலன், U-17 பிரிவில் மாணவர் B.பகவதி, U-19 பிரிவில் மாணவர் P.லோகேஷ் குமார், மாணவிகள் s.ஷாலினி, M.நந்திதா ஸ்ரீ ஆகியோர்  கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இம்மாணவ, மாணவிகள் வருகின்ற ஜனவரி மாதம் டெல்லி மற்றும் மகாராஷ்ரா ஆகிய இடங்களில் நடைபெறும் தேசிய யோகா போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய யோகா  போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள மாணவ, மாணவிகளையும், பயிற்சியாளர்களையும் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலாளர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.

புகைப்படம்: தேசிய யோகா  போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ள மாணவ, மாணவிகள், பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*