விளையாட்டு

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம்பள்ளி மாணவர் சாதனை 

5 (100%) 1 vote

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம்பள்ளி மாணவர் சாதனை

நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சுஜித் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும், இரண்டு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்இவர் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள மாணவர் சுஜித்திற்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர்S.மோகனரெங்கன், செயலாளர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவரை பாராட்டி வாழ்த்தினர்.

Comment here