தேர்தல் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் : தலைமை தேர்தல் ஆணையம் கோரிக்கை!

Rate this post

அரசியல் அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும் வகையில், தேர்தல் தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில், தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில், நீதிமன்ற உத்தரவுபடி, தனது பதிலை, பிரமாணப் பத்திரமாக, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்யும் அதிகாரம், தங்களிடம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால், அவர்களை தடுக்க முடியாமல் திணறி வருவதாகவும், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அரசியல் தலையீடு என்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிகமாகவே உள்ளதாகவும், தங்களை பின்னால் இருந்து சிலர் நிர்பந்திப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு உள்ளது போல், தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் அமைக்க வேண்டும் என்றும், இதன்மூலம், அரசியல் அழுத்தங்களை தவிர்த்து தேர்தலை சுதந்திரமாகவும், மேம்பட்ட வகையிலும் நடத்த உதவியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போதிய அதிகாரம் இல்லாததால், தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதுபோன்ற சமயங்களில், தேர்தல் ஆணையமே புதிய சட்டங்களை இயற்ற அதிகாரம் தேவை என்றும் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*