வரலாறு

தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் இன்று.. 

Rate this post

✍ மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்பரவரி 7ஆம் நாள்…

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் தேவநேசன்.

✍ 1925இல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது.

இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

✍ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமற்கிருதம் ஆகிய இந்திய மொழிகள்,
ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

✍ இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1974இல்
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

✍ இவர் ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன்”, ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சான்றுகளுடன் மெய்ப்பித்தவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவர்தம் மாணாக்கர் ஆவார்.

17 மொழிகளைக் கற்ற இவர்..
எங்கும் எப்போதும்
எவரிடத்தும்
தூய தமிழில் தான் பேசுவார்; உரையாடுவார்.

தமிழுக்காகத் தன்னை முழுமையாக ஈகித்துக் கொண்ட தேவநேயப் பாவாணர் தம் 78ஆவது அகவையில் (1981) மறைந்தார்.

  • பாவலரேறு தேன்தமிழ்ப் பாசறை, உடுமலைப்பேட்டை.

Comment here