அரசியல்இந்தியாதமிழகம்தொழில்பிரத்யகம்பொதுவீடியோவேலை வாய்ப்பு

தேவையா இந்த வடமொழி ?

                                              அண்மையில் ‘புதிய தலைமுறை’ இதழில் ஒரு கார்ட்டூன் வெளிவந்திருக்கிறது. பசியுடன் அமர்ந்திருக்கிறான் ஒரு இந்தியன். எதிரில் காலி வாழை இலை. நரேந்திர மோதியோ ஒரு பழைய புத்தகத்தை அவனிடம் நீட்டுகிறார். அதில்  ‘சமஸ்கிருதம்’ என எழுதியிருக்கிறது.  modi_pt_cartoonஅதாவது மோதி அரசு சமஸ்கிருத வாரத்தை கொண்டாடச் சொல்லி சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விட்டதை கிண்டல் செய்கிறார்களாம். ஆனால்  இந்த கார்ட்டூன் படத்திற்கும் மத்திய அரசு சுற்றறிக்கைக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் கொதித்தெழுந்துவிட்டார்கள் திராவிட கொழுந்துகள்! எப்படி கொண்டாடலாம் சமஸ்கிருத வாரம்? அதனால் தமிழ் அழிந்துவிடும் அல்லவா? புரட்சிp புயல் வைகோ முதல் புரட்சித்தலைவி ஜெயலலிதா வரை தமிழ் உணர்வு சமஸ்கிருத வெறுப்பாக கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தப் புரட்சி தமிழ் ஜோதியில் கலக்காமல் இருந்தால் பிறகு தெய்வ குத்தம் ஆகிவிடுமென நினைத்ததோ என்னவோ ‘புதிய தலைமுறை’யும் இந்த கார்ட்டூனைப் போட்டு புண்ணியம் தேடிக் கொண்டது.

இந்த கார்ட்டூன் குறித்து தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினரும் வரலாற்றாராய்ச்சியாளரும், பாஜகவின் மாநில எஸ்.சி. பிரிவு செயற்குழு உறுப்பினருமான திரு. ம.வெங்கடேசன் கூறுகிறார்:

இந்த கார்ட்டூன் படத்திற்கும் மோடி அரசு சுற்றறிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. maveஇது மோடி அரசுக்கு அவப்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டிருக்கிறது. மோடி அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்கள் அனைவருமோ அல்லது  எல்லா மாநில அரசுகளுமோ சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று மோடி அரசு சொல்லவில்லை.

நரேந்திர மோதி அரசு சிபிஎஸ்இ  பள்ளிகளில் மட்டும் ( படிக்கும் மாணவர்களுக்கு) சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும் என்றுதான் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே சமஸ்கிருத பாடம் பல பள்ளிகளில் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் ஏதோ சமஸ்கிருதம் தமிழுக்கு விரோதம் என்பது போலவும், இது ஒரு சதித்திட்டம் போலவும், இதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது போலவும்,  இங்குள்ள தமிழ் ஆர்வலர் என்கிற பெயரில் செயல்படும் கும்பல் அலறுவது அருவருப்பாக உள்ளது.  ஆனால் ‘புதிய தலைமுறை’ இதழோ விஷமத்தனத்தின் எல்லைக்கும் நச்சுத்தனத்தின் சிகரத்துக்குமே போய்விட்டது.

உண்மை என்ன என்பதை பார்ப்போம்.

மோதி அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறியதா? இல்லை. உணவுப்பொருள் விலையேற்ற வேகத்தைக்  குறைந்திருக்கிறது;  கடந்த இரண்டரை ஆண்டுகளில் (30 மாதங்களில்) மிகக் குறைவான இலக்கத்தைத் தொட்டிருக்கிறது.  இதற்கு முக்கிய காரணம் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுதான் காரணம். ஆனால் உணவுப்பொருட்களின் விலை ஏறுகிறது. அவற்றை அடக்க நரேந்திர மோதி அரசு தீவிரமாக செயல்படுகிறது. உணவு விலையேற்ற வேகம் குறைந்ததற்கு காரணம் என்ன? முந்தைய அரசு தானியங்களை தேக்கி வைத்திருந்ததை மோதி அரசு திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல. பதுக்கி வைப்பவர்கள் இடைத்தரகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது.food_inflation

காய்கறிகள் விலை விஷயத்தில்  விவசாய விளைபொருட்கள் விற்பனை கமிட்டி சட்டம் (Agriculture Produce Marketing Committee (APMC) Act) என்கிற பழைய சட்டம் விவசாயிகளை இடைத்தரகர்கள் நிறைந்த சந்தைகளில் விற்க நிர்ப்பந்திக்கிறது.  பெரும் நிலச்சுவான்தார்கள்  பெரும் முதலாளிகளிடமிருந்து உழவர்களை பாதுகாக்க ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் விற்க விவசாயிகளை நிர்ப்பந்திக்கும் இந்த நேருவிய சட்டம் உண்மையில் சாதித்தது என்னவோ அடுக்கடுக்கான இடைத்தரகர்கள் நிறைந்து விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைக்காமல் செய்தது மட்டும்தான். அப்போது விவசாயிகள் அவர்கள்  தேர்ந்தெடுப்பவர்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் நேரடியாக விற்க முடியும்.

இடைத்தரகர்களின் கொடுங்கோல் அவர்களுக்கு கொடுக்கப்படும் தரகு விலைகள் அவற்றின் சுமைகள் இறுதியில் காய்கறி வாங்குவோர் மீது விலைச்சுமையாக ஏறுவது ஆகியவை தவிர்க்கப்பட்டு விடும்.  இறுதியாக இந்த இடைத்தரகு ஒரு இல்லத்தரசி வாங்கும் காய்கறியின் விலையில் ஏறக்குறைய 75 சதவிகிதம் இடைத்தரகர்களுக்குத் தான் போகிறது என்று சொல்கிறது  ஒரு பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு.

இந்த காலாவதியாகி இன்றைக்கு விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாகிவிட்ட ஒரு சட்டத்தை அகற்ற இல்லாவிட்டால் நீர்த்து போக வைக்க  நரேந்திர மோதி அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் நேரடி விற்பனையில் விவசாயிகள் இறங்க முடியும். இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். பெரிய அளவில் காய்கறிகள் விலையை குறைக்க முடியும். (Govt targets middlemen in food chain as inflation bites, பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஜூலை 11, 2014). இத்தனைக்கும் இந்த இடைத்தரகர்கள் என்பது ஒரு வலுவான அணி. பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கி எனக் கூட கருதப்படும் அணி.

ஆனால் நரேந்திர மோதி அரசு எப்போதுமே இப்படித்தான். குஜராத்தில் மின் உற்பத்தி விநியோகத்தை சரி செய்ய மின்சாரத்தை கொள்ளை அடிப்பதில் கட்சி ஆட்களுக்கு தயவு காட்டாமல் இயங்கித்தான் சாதனையை செய்தது மோதி அரசு. இன்று பொதுவான உணவு விலையேற்ற வேகம் 9.56 இல் இருந்து 7.97 வந்துள்ளது.  பொதுவாகவே பாஜக அரசுகள் வாஜ்பாய், நரேந்திர மோதி) இடதுசாரி காங்கிரஸ் அரசைக் காட்டிலும் உணவு விலையேற்றத்தைத் தடுப்பதில் திறமையுடன் செயல்படுவதாக கூறுகிறார் ஜியா ஹக் என்கிற செய்தியாளர். (’NDA government manages food prices better’, ஹிந்துஸ்தான் டைம்ஸ், 16-ஜூலை-2014)

தற்போது உணவு விலையேற்ற வேகத்தை தடுக்க மோதி தலைமையிலான பாஜக மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

  • எலிகள் தின்று வீணாகும்படியாக காங்கிரஸ் அரசு ’சேமித்து’ வைத்திருந்த உணவு தானியங்களில் 50 லட்சம் டன் உணவு தானியங்கள் மக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
  • உருளை கிழங்கு வெங்காயம் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள்/சேவை சட்டத்தின் (ESMA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • பதுக்கல்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஏற்றுமதி விற்பனை விலை உயர்த்தப்பட்டு அவற்றின் ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது.

உணவின் விலை ஏற்ற வேகம் ஒரே மாதத்தில் 1.6 சதவிகிதம் கீழே வந்ததற்கு காரணம் இவைதான். ஒட்டுமொத்தமாக நரேந்திர மோதி அரசு ஏதோ உணவு விலையை கட்டுப்படுத்த ஏதும் செய்யாமல் இருப்பது போல குற்றம் சாட்டுகிறது ‘புதிய தலைமுறை’.

சரி…இனி சமஸ்கிருதத்துக்கு வருவோம்…

  • அப்படி சமஸ்கிருதம் என்ன ஒரு வெறுக்கத்தக்க மொழியா? இல்லை.
  • அல்லது வெறும் ஒரு தனி ஜாதியின் மொழியா? இல்லை.
  • அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் பேசப்படும் மொழியா? இல்லை.
  • அனைத்து சாதியினரும் அனைத்து பிரிவினரும் சமஸ்கிருதத்தில் பங்களித்திருக்கின்றனர்.
  • அனைத்து இந்திய பிரதேசங்களிலும் சமஸ்கிருத பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காவியங்களை எழுதியிருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகவும் தொன்மையான குடியினர் நாகர்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். shalivahana1சாலிவாகனனை மணந்த நாகர் இளவரசி மிக இயல்பாக சமஸ்கிருதம் பேசியிருக்கிறாள். ஆனால் சாலிவாகனனுக்கு சமஸ்கிருதம் தெரியாமல் இருந்து பிறகு படித்திருக்கிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது? சமஸ்கிருதம் அன்னிய மொழி அல்ல. இங்குள்ள பூர்விகவாசிகளின் மொழியாகத்தான் கருதப்பட்டுள்ளது.

சமஸ்கிருதத்தின் ஆதி காவியம் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ஆகும். வால்மீகி முனிவர் யார்? தலித் சமுதாயத்தைச் சார்ந்த வேடர்.

சமஸ்கிருத மொழியின் மிகச்சிறந்த கவி யார்? காளிதாசன். காளிதாசன் யார்? மாடு மேய்க்கும் சூத்திரராக இருந்தவர்.

vanmikiசமஸ்கிருதத்துக்கும் அடிப்படையாக விளங்கிய வேதங்களை வகுத்தளித்தவர் யார்? மகாபாரதம் எனும் அமர காவியத்தை அம்மொழியில் உருவாக்கியவர் யார்? மீனவப்பெண்ணின் மைந்தனான வியாசர். அப்படியானால் சமஸ்கிருதம் எப்படி மேல்சாதியினருக்கு மட்டும் உரிய மொழி எனக் கருத முடியும்?

சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அடைய சமஸ்கிருதம் ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கருதினார்.  அனைவருக்குமான மொழியாக இருந்த சமஸ்கிருதம் இடைப்பட்ட காலத்தில் சமுதாயத்தின் மேல்தட்டுகளில் இருந்த மக்களுக்கு மட்டுமான மொழியாக மாறிவிட்டது. இதனை மாற்ற வேண்டும். என்று விவேகானந்தர் கருதினார்.  அவர் சொன்னார்:

நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. stamp_svஎனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். …எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக சொத்துகள் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.

டாக்டர் அம்பேத்கர் சமூக நீதிக்காகப் போராடிய புரட்சியாளர். அவர் சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இது 11-செப்டம்பர்-1949 தேதியிட்ட ’ஸண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்’  இதழில் வந்திருக்கிறது. மேலும் 2001 இல் பாஜக அரசு ஆட்சியின் போது இதே போல ஒரு பிரச்சனையை போலி-மதச்சார்பின்மைவாதிகள் சமஸ்கிருதம் குறித்த பிரச்சனையை எழுப்பிய Ambedkar Among Sponsors()1 (1)போது திரு.B.P.மௌரியா எனும் தலைவர் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அவர் இளைஞராக இருந்த போது டாக்டர் அம்பேத்கருடன் இருந்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

10-செப்டம்பர் 1949 இல் அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் (All India Scheduled Caste Federation) எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி  கூடியது. அப்போது பேசிய டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டிய அவசியத்தைக் கூறினார். இதை சில தலைவர்கள் எதிர்த்த போது, அவர்கள் தம்மை விட்டுப் பிரிந்தாலும் கவலை இல்லை, தாம் சமஸ்கிருதத்தை ஆதரிப்பதாக டாக்டர அம்பேத்கர் கூறினார்.  இந்தச் சம்பவங்களை மௌரியா அவர்கள் 14-2-2001 அன்று அரசுக்கு கடிதமாக எழுதினார்.  babasheb_Sanskritஅது மட்டுமல்ல, அந்த காலகட்டத்தைச் சார்ந்த செய்தி தாள்களில் இந்த விஷயங்கள் எல்லாம் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டத்தில் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்த மைத்ராவுடன் பாபா சாகேப் அம்பேத்கர்  சமஸ்கிருதத்தில் உரையாடினார்.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் சிறுவயதில் சமஸ்கிருதம் படிக்க ஆசை இருந்தும் பாரசீகம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பாபா சாகேப் அம்பேத்கருக்கு. ஆனால் அவரே சமஸ்கிருதம் கற்று அதில் உரையாடும் அளவு தேர்ச்சியும் பெற்றிருந்தார் என்பது எத்தனை முக்கியமான விஷயம்.

நேருவின் உதவியாளர் மத்தாயிடம் உரையாடும் போது இந்தி பேசும் சமவெளி மக்கள்  துளசிதாஸின் இந்தி ராமாயணத்துக்கு பதிலாக வால்மீகியின் சமஸ்கிருத ராமாயணத்தை மதிக்கும் போதுதான் மக்கள் பிற்போக்குத்தன்மையிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றார் டாக்டர் அம்பேத்கர். (மத்தாய் நினைவுகள், பக்.24) சமஸ்கிருதம் குறித்து டாக்டர். அம்பேத்கர் என்ன கருத்து கொண்டிருந்தார்?  சமஸ்கிருதத்துக்கு முன்னால் பாரசீக மொழி நிற்க முடியாது என்கிறார் பாபா சாகேப்.

சமஸ்கிருதம் நம் காவியங்களின் பொற்பேழை. நம் இலக்கணமும், அரசியலும், தத்துவமும் தவழ்ந்த தொட்டில். நம் தர்க்க சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், இலக்கிய விமர்சன மரபு ஆகியவற்றின் இல்லம். (நவ்யுக்-அம்பேத்கர் சிறப்பிதழ், 13-ஏப்ரல்-1947)

நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒரு கருத்தை நூல் முகவுரை ஒன்றில் கையொப்பமுடன் வெளியிட்டார்.

பாரதீய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்கிருத மொழியை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதையும் நான் உணர்கிறேன்.

இல்லை. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்ல. இந்த கருத்தை வெளியிட்டவர்: கர்மவீரர் என நம் தமிழக மக்கள் அன்புடன் அழைக்கும் காமராஜர் அவர்கள். 1972 இல் திராவிட அலை அடித்த காலகட்டத்தில் பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ‘முப்பது நாட்களில் சமஸ்கிருதம் கற்பது எப்படி?’ என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கர்மவீரர். அதில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழகம் இன்று மானுட வள மதிப்பீடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணமானவர் காமராஜர். kamaraj1அவரது மதிய உணவு திட்டம்தான் தமிழ்நாட்டின் கல்வியின் ஊற்றுகண்ணைத் திறந்தது. கல்விச்சாலைகளைத் திறந்த கர்மவீரர் காமராஜர்  ‘இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டும்’ என்று கூறிய சமஸ்கிருத மொழியை டாஸ்மார்க்குகளை திறந்து தமிழ்நாட்டைjk1சீரழிக்கும் புரட்சி தலைமைகள் எதிர்ப்பதும் வெறுப்பதும் இயற்கை என்றுதான் சொல்ல வேண்டும். இடதுசாரி பாசறையில் வளர்ந்தவர். விவேக வேதாந்தத்தை மானுடத்துவத்துடன் பேசி ஒரு தலைமுறையை செதுக்கியவர் ஜெயகாந்தன். அவர் சொல்கிறார்:

சமஸ்கிருத மொழியைச் சகல சாமான்யரின் மொழியாக மாற்றும் உன்னதப் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

சாதியத்தை ஒழிக்க சிறந்த வழி சமஸ்கிருதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது. சுவாமி விவேகானந்தரும் பாபா சாகேப் அம்பேத்கரும் கர்மவீரர் காமராஜரும் காட்டும் வழியில் சமஸ்கிருதத்தை போற்றும் நரேந்திர மோதியின் செயல்பாட்டை போற்றுவோம். போலி தமிழ் பற்றாளர்களின் அரசியல் கோமாளித்தனங்களை கண்டு நகைத்து புறந்தள்ளி முன்னகர்வோம்.

– அரவிந்தன் நீலகண்டன்

Comment here