அரசியல்

தே.மு.தி.க., தொழிற்சங்கத்தினர் அ.தி.மு.க.,வில் இன்று ஐக்கியம்

கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகள் பலரை, அ.தி.மு.க., இழுத்தது. அ.தி.மு.க., வலையில், தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களும் விழுந்தனர். இவர்கள், சட்டசபையில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக செயல்பட்டனர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், தே.மு.தி.க.,வில் இருந்து ஆட்கள் இழுப்பதை, அ.தி.மு.க., நிறுத்தியது. சட்டசபை தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,வில் சேருவதற்கு, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகள் பலரும் ரகசிய துாது விட்டனர். ஆனால், அ.தி.மு.க., தலைமை, இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவர்களில் பலர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், தே.மு.தி.க.,வினர், இன்று அ.தி.மு.க.,வில் இணைகின்றனர். தே.மு.தி.க., மாநில தொழிற்சங்க பேரவை செயலர் சவுந்தரபாண்டியன் தலைமையில், தொழிற்சங்கத்தை சேர்ந்த பலரும் இணைய உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மேலும் பல தே.மு.தி.க., நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

 

Comment here